தென்காசி அருகே விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்த போது நடராஜர் சிலை தென்பட்டதால் அதிர்ச்சியடைந்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் பட்டங்காடு காளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு எதிர்புறம் உள்ள இடத்தில் தென்னங்கன்று நடுவதற்காக டிராக்டரால் நிலத்தை உழுதனர். அப்போது நடராஜர் சிலை ஒன்று தென்பட்டது.
உடனே அதை வெளியே எடுத்து, ராமநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிவபாக்கிய விநாயகர் கோவிலில் வைத்து, சிலைக்கு மாலை மற்றும் பட்டாடை அணிவித்து பூஜை செய்தனர். மேலும் சிலை முன்பு அமர்ந்து பஜனை பாடி வழிபட்டு வருகின்றனர்.
தென்காசியில் ஒரு கிலோ கேக் வாங்குனா அரை கிலோ கேக் இலவசம்.. எந்த கடையில தெரியுமா?
தென்காசியில் 5 இடங்களில் நகர்புற நல்வாழ்வு மையங்கள் திறப்பு.. எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?
சங்கரன்கோவிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறப்பு!
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்.. தென்காசி ஆட்சியர் அதிரடி!
தென்காசி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்.. 12 உறுப்பினர் தேர்வு!
தென்காசி மாவட்ட அரசு விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன?
தென்காசியில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!
திடீரென தாக்கிய மின்னல்..! கடையம் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ..!
அது என்ன டபுள் டக்கர் சாண்ட்விச்..? சங்கரன்கோவிலில் பிரபலமாகும் புதிய வகை சாண்ட்விச்..!
தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்..
தென்கொரியாவில் நடைபெற்ற தடகளப்போட்டி.. சாதனை படைத்த தென்காசி மாணவி..
ALSO READ | தென்காசியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்.. வேடிக்கை பார்க்கிறதா நகராட்சி?
தொடர்ந்து தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் சரவணன், ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி ஆகியோர்நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த நிலத்தில் சிலை வந்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை செய்தனர். இதையடுத்து அவர்கள் இந்த சிலை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Ancient statues, Local News, Tenkasi, The idols