கேமிங் மற்றும் ஸ்மார்ட்போன்கள் என்று வரும்போது, இரண்டு விஷயங்கள் முக்கியமானவை: அவை, கூலிங் மற்றும் எர்கோனாமிக்ஸ். மூல செயல்திறன் முக்கியமானதுதான், ஆனால் போதுமான குளிர்ச்சியின்மை அதிக பயன் அளிக்காது. அதேபோல், நீங்கள் நீண்ட நேரம் போனில் கேம் விளையாட முடியாது, ஏனெனில் அவ்வாறு விளையாடுவது அசௌகரியமாக இருக்கும்.
OnePlus, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 10R உடன், மூல செயல்திறனை வழங்கும் அதேவேளையில் இரண்டு சிக்கல்களை நிவர்த்தி செய்வதாகக் கூறுகிறது. சிறப்பான விஷயம்தானே? அது உண்மைதான். ஆனால் முதலில், இந்த சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்
OnePlus எப்போதுமே பயன்படுத்தும் மிகப்பெரிய கூலிங் சிஸ்டம்
மிகவும் சக்திவாய்ந்த ஹார்டுவேர் அமைப்பிற்கு திறமையான கூலிங் அமைப்பு தேவைப்படுகிறது. முக்கியமாக, சிப் சூடாக இயங்கினால், அது சிப்பின் ஆயுளைப் பாதுகாக்கவும், ஃபோனின் வெளிப்புறம் வைத்திருக்க முடியாத அளவிற்கு வெப்பமடைவதைத் தடுக்கவும் உதவும் தெர்மல் த்ரோட்லிங் எனப்படும் செயல்முறையின் வேகத்தைக் குறைக்கும்.
இது நிகழாமல் தடுக்க, OnePlus, இதுவரை பயன்படுத்தியவற்றில் மிகப்பெரிய, மேம்படுத்தப்பட்ட கூலிங் அமைப்பைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. இந்த கூலிங் அறை 4,100 சதுர மிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது, மொத்த திறனுள்ள கூலிங் பகுதி 35,000 சதுர மிமீக்கு மேல்!
செயல்திறன் மேம்படுத்தல்கள்
இதனுடன், செயல்திறனை மாற்றியமைப்பதற்காக OnePlus ஆனது ஹைப்பர்பூஸ்ட் கேமிங் என்ஜின் என்ற அமைப்பைப் பயன்படுத்துகிறது. இந்த அமைப்பின் ஒரு பகுதியாக பொது செயல்திறன் அடாப்டர் (GPA) ஃபிரேம் ஸ்டெபிலைசர் (FS) என்று அழைக்கப்படும் அம்சம் உள்ளது, இது உங்கள் விளையாட்டின் அடுக்கை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் கேமிங் அனுபவத்தில் குறுக்கிடாத வகையில், நிகழ்நேரத்தில் CPU மற்றும் GPU ஆதாரங்களை சமநிலைப்படுத்த GPA FS ஆனது கண்காணிப்பு கருவிகள் மற்றும் AI ஐப் பயன்படுத்துகிறது, இது எதிர்பாராத ஃப்ரேம்-ட்ராப்கள் படிப்படியாக நடப்பதை உறுதி செய்யும்.
மற்றொரு புதுப்பிப்பாக வயர்லெஸ் அமைப்பு உள்ளது. ஆறு ஆண்டனாக்களின் வரிசையானது, நீங்கள் ஃபோனை எப்படி வைத்திருந்தாலும் தடையற்ற இணைப்பை உறுதிசெய்கிறது, மேலும் புளூடூத் மற்றும் வைஃபையை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது குறைவான குறுக்கீட்டை உறுதிசெய்யும் புதுப்பிக்கப்பட்ட அமைப்பும் உள்ளது.
அடுத்து டிஸ்பிளேவைப் பற்றி பார்ப்போம். இந்த 6.7-இன்ச் திரையானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது, ஆனால் மிக முக்கியமாக, 1000 ஹெர்ட்ஸ் டச் ரெஸ்பான்ஸும் உள்ளது. HDR10+ சான்றளிக்கப்பட்ட கலர் அக்யூரேட் P3 பேனலை வாங்குங்கள், எனவே பிரகாசமான, துல்லிய வண்ணங்களைக் கொண்ட, மங்கலற்ற கேமிங் அனுபவத்தைப் பெறுவதற்கான உத்தரவாதம் உங்களுக்கு கிடைக்கும்.
இறுதியாக, பேட்டரி லைஃப் பற்றி பார்ப்போம். படம் பிடிக்கும் தருவாயில் உங்கள் போனின் பேட்டரி தீர்ந்துவிடும் நிகழ்வு அல்லது உங்கள் நண்பர்களுடன் சாலைப் பயணத்திற்கு விரைந்து செல்ல ஆசைப்படும் போது உங்கள் தொலைபேசி சார்ஜ் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய நிகழ்வு போன்ற நிகழ்வுகள் மிகவும் ஏமாற்றமளிக்கும் நிகழ்வுகள் அல்லவா?
இந்த தேவைகளை OnePlus இன் பிளேசிங் ஃபாஸ்ட் SUPERVOOC சார்ஜிங் அமைப்பு நிவர்த்தி செய்கிறது. இது இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது - அவை, 5,000 mAh பேட்டரியுடன் 80W மற்றும் 4,500 mAh பேட்டரியுடன் 150 W ஆகியவை. 10R சிறந்த பேட்டரி ஆயுள் மற்றும் அபரிமிதமான சார்ஜிங் வேகத்திற்கு உறுதியளிக்கிறது. ‘மெதுவான’ 80 W சார்ஜர் 5,000 mAh பேட்டரியை 1-100% சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் எடுக்கும், ஆனால் 150 W பதிப்பு 3 நிமிடங்களில் 30% சார்ஜையும், வெறும் 17 நிமிடங்களில் முழு சார்ஜையும் கொடுக்கும்.
டிசைன் மாற்றங்கள்
நீண்ட நேரம் கேம் விளையாட, கையில் வைத்திருப்பதற்கு வசதியாக இருக்கும் ஃபோன் தேவை. 10R எளிமையான, தட்டையான விளிம்புகளைக் கொண்டுள்ளது, அது நேர்த்தியாக இருப்பது மட்டுமல்லாமல், நன்கு கையில் பிடித்துக்கொள்ளவும் உதவுகிறது. ஃபோன் மிகவும் மெல்லியதாக வெறும் 8.17 mm மற்றும் 186 gram எடையில் உள்ளது, இது மிகவும் இலகுவான சாதனம்.
இது நீண்ட நேரம் கேமிங் விளையாடுவதன் சோர்வைக் குறைக்கிறது. இது தவிர, பின்புறக் கண்ணாடியில் நானோ-டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் உள்ளது, இது சில வெல்கம் ஃப்ரிக்ஷனைச் சேர்க்கும் அதே நேரத்தில் கைரேகைகளைத் தடுக்கிறது.
OnePlus 10R ஆனது மே 4 அன்று ரூ.38,999 முதல் தொடங்கும் விலையில் விற்பனைக்கு வருகிறது. சியரா பிளாக் மற்றும் ஃபாரஸ்ட் க்ரீன் நிறங்களில் இந்த போன் கிடைக்கும்.
Promoted Content
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Oneplus, Technology