Home / News / tamil-nadu /

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவி-க்களை நிறுத்தச் சொன்னது யார்?

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவி-க்களை நிறுத்தச் சொன்னது யார்?

ஜெயலலிதா

ஜெயலலிதா

அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை அணைத்து வைக்கச் சொன்னது யார் என்ற கேள்விக்கு இதுவரைக்கும் தெளிவான பதில் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு சொன்னது என்ன?

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அடுத்தநாள், அதாவது செப்டம்பர் 23 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிக்களில் பெரும்பாலானவை அகற்றப்பட்டன, சில அணைத்து வைக்கப்பட்டன. ஆனால், இதற்கான உத்தரவை பிறப்பித்தது யார்? என்ற கேள்விக்கு ஆண்டுகள் ஐந்தான பிறகும் இன்னும் விடை கிடைக்கவில்லை. தமிழக அரசு சொல்வது என்ன?

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில், சிசிடிவிக்களை நிறுத்தச் சொன்னது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் வாய் மொழியாக பிறப்பித்த உத்தரவின் பெயரில் சிசிடிவிக்கள் அணைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை உறுதி செய்வதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமைச் செயலக அலுவலகத்திற்கு கேள்விகளுடன் மனு அனுப்பப்பட்டது

ஆனால், தங்களிடம் இது குறித்த பதில் இல்லை என்பதால், அதற்குரிய துறையான சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அந்த மனுவை தலைமைச் செயலக நிர்வாகம் மாற்றி அனுப்பியது. ஆனால், அதிர்ச்சி என்னவென்றால், தங்களிடமும் சிசிடிவி குறித்த தகவல் இல்லை என சுகாதாரத் துறையும் பதில் அளித்துள்ளது. இதனால், அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவியை அணைக்கச் சொன்னது யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. வாய்மொழி உத்தரவைக் கொண்டு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவிக்களை நிறுத்தியதும், அகற்றியதும் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read : ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ கொலை : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்த போது, வேறு பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஜெயலலிதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அடுத்த நாளே, அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 23 சிசிடிவிக்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அத்தோடு, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளன்று மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஒரு சிலர் அகற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:ADMK, Jayalalitha

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube