PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... அடுத்த 2 நாட்களில்... வானிலை மையம் விடுத்த அலெர்ட்

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... அடுத்த 2 நாட்களில்... வானிலை மையம் விடுத்த அலெர்ட்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த இரு தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

மழை

இந்திய பெருங்கடலின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, குறைந்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவித்துள்ள வானிலை மையம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளதாவது:-

27 மற்றும் 28-ம் தேதி  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு  இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும்.

27 மற்றும் 28-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு  இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும்.

பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (27.01.2023) காலை 5.30 மணி அளவில்  ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி,  காலை   8.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 31-ம் தேதி அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப். 1-ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்று அடையக்கூடும்.

இதன் காரணமாக, 29-ம் தேதி வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும்.

சென்னை வாசியா நீங்க ? இந்த இடங்களுக்கு குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா போய்ட்டு வாங்க..

30-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஒருசில  இடங்களில்   இடிமின்னலுடன் கூடிய லேசான /   மிதமான மழை  பெய்யக்கூடும்.

377

31-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இதையும் படிங்க: இந்தியாவில் உள்ள இந்த கிராமத்தில் யாருக்கும் பெயரே கிடையாதாம்... காரணம் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  27 மற்றும் 28-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்,   பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29-ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்  மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை ..

30-ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

31-ம் தேதி இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:Weather News in Tamil

முக்கிய செய்திகள்