வங்கதேச (பங்களாதேஷ்) நாட்டில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படு்ம் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 27 ம் தேதி ஒருமித்த கருத்துடைய இயக்கங்களை ஒன்று சேர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக புதியதமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் இந்துகளின் வழிபாட்டு தலங்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றது என தெரிவித்தார்.
குறிப்பாக பங்களாதேஷ் நாட்டில் இந்து மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த அவர், பங்களாதேஷ் 1947 வரை இந்தியாவின் அங்கமாக இருந்த பகுதி எனவும், அதன் பின்பு 1971 க்கு பின்பு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்தது என தெரிவித்தார். பங்களாதேஷ் நாட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்துகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதும் இடம் பெயர்வதும் தொடர்கின்றது எனவும், 28 சதவீதமாக இருந்த இந்துகளின் எண்ணிக்கை தற்போது 8 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
அங்கு இந்துகளின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்க கூடியதும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி புதியதமிழகம் கட்சி ஒருமித்த கருத்துடைய அனைத்து இயக்கங்களையும் ஓன்று சேர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச அரசியல் குறித்து பேசிய டாக்டர் கிருஷ்ணசாமியிடம்,
திமுக தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விகள் எழுப்பபட்டது. அவற்றிக்கு பதில் அளிக்க மறுத்த டாக்டர். கிருஷ்ணசாமி, பங்களாதேஷ் விவகாரம் முக்கியமானது எனவும் மனித உரிமை தொடர்பானது என கூறிய அவர், இந்த விவகாரத்திற்கு வடமாநில ஊடங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழக ஊடகங்கள் கொடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Bangladesh, Doctor krishnaswamy, Dr Krishnasamy, Puthiya Tamilagam