மதமும் சனாதனமும் வேறு வேறு என்று தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்தின் படி தர்மா என்றால் அறம் என்றுதான் பொருள் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழா இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி, அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் கையில் மிக பெரிய சக்தியை வழங்கியுள்ளது. அது மிக பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த உலகத்தை அழிக்க கூடிய சக்தி பல நாடுகளிடம் தற்போது உள்ளது.
வெள்ளையர்கள் இந்த நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்ததால் பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல், காலச்சரத்திலும் நாம் பெரிய அளவில் இழந்தோம்.
வெள்ளையர்கள் வெளியேறிய பின்னர், இந்தியாவில் உள்ள மனிதர்களின் வாழ்க்கை முறை தர்ம விதிகளில் இருந்து திசை திருப்பப்பட்டது. அதிலிருந்து மீள வேண்டும் என்றால் வெள்ளையர்கள் ஆட்சி செய்த அளவிலான காலம் தேவைப்படும் என காந்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்காக ‘பத்திரிகை’... ரூ 7.15 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அரசாணை வெளியீடு
உண்மையில் சனாதனமும் மதமும் வேறு வேறு. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றி உள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது நாடு விழித்து கொண்டுள்ளது. நாட்டின் முதுகெலும்பு என விவேகானந்தர் மற்றும் காந்தி கூறிய ஆன்மிக வழியில் நாடு தற்போது சிந்திக்கவும் செயல்படவும் துவங்கியுள்ளது.
மேலும் அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் வல்லரசு நாடாக இந்திய இருக்க வேண்டும் என்ற பாதையில் செயல்பட்டு வருகிறது. அரசியலில் சரியாக இருக்க வேண்டும் என கூறி ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம்.அனைத்து கடவுகளுக்குமான இடம் என்பது இங்கு உள்ளது. ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. அது தர்மமே இல்லை என்றும் அனைத்து மாதங்களுக்கான இடமும் இங்கு உள்ளது.
மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்
விவேகானந்தரின் கனவு பாரதத்தை உருவாக்க, தர்மத்தை வளர்க்க வேண்டும். அதற்கு ஆன்மிகம் மீதான வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பாதையில் இதனையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்’ என பேசினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசுகையில், ஞானமும் பதவியும் ஒன்று சேராது. ஆர்.என்.ரவி போன்றவர்கள் ஆளுநராக வருவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சார ஆதிக்கத்தில் பல ஆண்டுகள் இருந்தும் நம் கலாச்சாரம் பண்பு காப்பற்றப்பட்டிருப்பதற்கு காரணம் ஞானிகள் தான். பாடபுத்தகங்கள், பள்ளி, கல்லூரி, அரசு இல்லை என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:RN Ravi, Tamil Nadu Governor