PREVNEXT
ஹோம் / நியூஸ் / தமிழ்நாடு /

கார்த்திகை தீபம் நேரலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீபம்!

கார்த்திகை தீபம் நேரலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீபம்!

Thiruvannamalai Karthigai Deepam Live: திருவண்ணாமலை மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு, வரும் 6-ம் தேதி மாலை 4.30 மணிமுதல் நேரலை செய்யப்படுகிறது

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு ஆன்லைன் மூலமாக ஆயிரத்து 600 அனுமதி சீட்டுகள் நேற்று வெளியிடப்பட்டது.

கார்த்திகைத் தீபத் திருவிழா நாளான வரும் 6ம் தேதியன்று, அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளன. இதேபோல், நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு மகா தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க 600 ரூபாய் கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் கட்டணத்தில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் திருவண்ணாமலை மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு, நாளை மாலை 4.30 மணிமுதல் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.

Tags:Karthigai Deepam, Live

சிறந்த கதைகள்