PREVNEXT
ஹோம் / நியூஸ் / தமிழ்நாடு /

கேரளாவிற்கு அதிகளவில் கனிமவளங்களை எடுத்து செல்லும் லாரிகளின் பாரம் காரணமாக தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு

கேரளாவிற்கு அதிகளவில் கனிமவளங்களை எடுத்து செல்லும் லாரிகளின் பாரம் காரணமாக தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Tamirabarani River | தெற்கு வள்ளியூரில் அதிகளவு பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளால் அழுத்தம் தாங்காமல் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததில் பல ஆயிரம்  லிட்டர் குடிநீர் வீணாகி செல்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் முதல் நிலை ஊராட்சி ஆகும். தெற்கு வள்ளியூரில் இருந்து ராதாபுரம் செல்லும் இணைப்பு சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் கனிம வளங்கள் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் லாரிகளால் அந்த வழியாக செல்லும் தாமிரபரணி குடிநீர் குழாய் அழுத்தம் தாங்காமல் குடிநீர் குழாய்  உடைந்து சாலை வழியாக குடிநீர் வீணாகி வருகிறது.

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வடக்கன்குளம் வழியாக டாரஸ் லாரிகள்  சென்று கொண்டிருந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்பொழுது லாரி ஓட்டுனர்கள் தெற்கு வள்ளியூர் பாதையைத் தேர்ந்தெடுத்து இந்த வழியாக சென்று வருகின்றனர். நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட லாரிகள் அதிக அளவில் பாரம் ஏற்றி சென்ற நிலையில் சாலைகளும் சேதமாகி அழுத்தம் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம்  லிட்டர் குடிநீர் கடந்த இரண்டு நாட்களாக வீணாகி செல்கிறது.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஊராட்சி நிர்வாகமும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே குழாய் உடைப்பால் மற்ற கிராமங்களுக்கு குடிநீர் செல்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் மின்வெட்டும் ஏற்பட்டு வரும்  நிலையில் உடைப்பினால் நீரானது வெளியேறி வருவது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:Tirunelveli

சிறந்த கதைகள்