PREVNEXT
ஹோம் / நியூஸ் / தமிழ்நாடு /

திருநெல்வேலியில் குப்பைகளை தரம் பிரிக்கத் திட்டம் - மாவட்ட ஆட்சியர் அசத்தல்

திருநெல்வேலியில் குப்பைகளை தரம் பிரிக்கத் திட்டம் - மாவட்ட ஆட்சியர் அசத்தல்

Tirunelveli District : இத்திட்டத்தின் கீழ் ஏப்.30ம் தேதி வரை மருத்துவமனை தூய்மையாக பராமரிக்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் திட்டம் திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். பின்னர் தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து தூய்மை பணியினை ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆட்சியர் விஷ்ணு தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசுகையில், கொரனோ காலத்தில் நீங்கள் தான் ஊரையே காப்பாற்றினீர்கள். மேலும் கொரனோ முதல் மற்றும் இரண்டாம் அலையில் மாநிலத்திலையே நெல்லை அரசு மருத்துவமனை தான் சிறப்பாக செயல்பட்டு முதல்வர் மற்றும் அமைச்சரிடம் பாராட்டை பெற்றுள்ளது.

ALSO READ |  நீட் - விண்ணப்பம் தொடக்கம்.. தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு!!

 அடுத்ததாக மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டம் மாநிலத்திலையே முதல் முறையாக முன்னோடி திட்டமாக 4 மாதத்திற்குள் நமது மருத்துவமனையில் துவங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் ஏப்.30ம் தேதி வரை மருத்துவமனை தூய்மையாக பராமரிக்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் : ஐயப்பன்

Tags:Tirunelveli

சிறந்த கதைகள்