திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு ஆன்லைன் மூலமாக ஆயிரத்து 600 அனுமதி சீட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
கார்த்திகைத் தீபத் திருவிழா நாளான வரும் 6ம் தேதியன்று, அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளன. இதேபோல், நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு மகா தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க 600 ரூபாய் கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் கட்டணத்தில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளன.
அண்ணாமலையார் கோயில் இணையதளம் மூலம், இன்று காலை 10 மணி முதல் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. ஆதார் அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வழங்கி ஆன்லைன் தரிசன டிக்கெட்களை பெறலாம். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பின் உற்சாகத்துடன் பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். குழந்தை வரம் வேண்டிய பக்தர்கள், கரும்புத் தொட்டில் சுமந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு, வரும் 6-ம் தேதி மாலை 4.30 மணிமுதல் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Karthigai Deepam