தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு துறை காவலர்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 3552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
சென்னையை பொறுத்தவரை கே.கே நகர், ராமாபுரம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், வேளச்சேரி , அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் கல்லூரிகள் என 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வை எழுதினர்.
அந்த வகையில் சென்னை புரசைவாக்கம் அழகப்பா பள்ளியில் 500 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 250 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணிக்கு துவங்கிய இந்த தேர்வானது மதியம் 12.40 வரை நடந்தது.
இதையும் படிங்க: தென்காசி: நிலத்தை உழுத போது டிராக்டரில் சிக்கிய நடராஜர் சிலை.. பஜனை பாடி வழிபட்ட மக்கள்!
அந்த வகையில் தமிழகத்தில் இந்த சீருடை பணியாளர் தேர்வின் மூலம் ஆயுதப் படை, சிறப்பு காவல் படைமற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்கள் , தீயணைப்பாளர்கள் என மொத்தமாக 3552 பணியிடத்துக்கு 3.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுகளை எழுதினர். இதில் 2.99 , 887 பேர் ஆண்கள், 66,811 பேர் பெண்கள், 59 பேர் மூன்றாம் பாலினத்தவர் என தேர்வை எழுதினர்.
தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களை காவல் துறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். தேர்வு எழுத விதிமுறைகள் இருப்பதாலும், செல் போன், வாட்ச், சீப்பு, மொபைல் போன் போன்ற பொருட்கள் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை என்பதாலும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர்.
தேர்வுக்கு விண்ணப்பித்த 3. 66 லட்சம் பேரில் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.