PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / அதிமுகவில் இணைவதாக வெளியான தகவல்... சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு..

அதிமுகவில் இணைவதாக வெளியான தகவல்... சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு..

திமுகவில் இருந்து விலகிய பிறகு நான் இணைவதற்கான தகுதியான அரசியல் கட்சி தமிழகத்தில் இல்லை என்றும், அதிமுகவில் நிச்சயமாக இணையமாட்டேன் எனவும் சுப்புலட்சுமி ஜெகதீசன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசன்

அதிமுகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் துணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என விரும்புவதாகவும், ஆகஸ்ட் 29 ஆம் தேதியே விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் அளித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வழக்கறிஞர் பாபு முருகவேல் இன்று மாலை தரமான சம்பவம் என்றும், தெறி மாஸ் எடப்பாடியார் என்றும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்வீட்டை தொடர்ந்து, சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து நியூஸ் 18 தமிழுக்கு பேட்டியளித்த சுப்பு லட்சுமி ஜெகதீசன், திமுகவில் இருந்து விலகிய பிறகு நான் இணைவதற்கான தகுதியான அரசியல் கட்சி தமிழகத்தில் இல்லை என்றும், அதிமுகவில் நிச்சயமாக இணையமாட்டேன் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார். வேண்டுமென்றால் திராவிடர் கழகத்தில் இணையலாம் என்றும் இதனால், திமுக தலைவர் ஏதேனும் தவறாக நினைத்துக்கொள்வாரோ என தி.க தலைவர் வீரமணிக்கு தயக்கம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குண்டுவெடிப்பு சம்பவங்கள்.. பாஜகவினர் மீது சந்தேகம் கிளப்பும் சீமான்

மேலும், பேசிய அவர், அரசியல் கட்சியில் இருந்து நான் நினைப்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. அதனால்தான் கட்சியில் இருந்து வெளியேறி விட்டேன். நான் தற்போது பொது வெளியில் இருக்கிறேன். எனக்கென்று சில திட்டங்கள் இருக்கிறது. அவற்றை வகைப்படுத்திவிட்டு எங்கே போகிறேன் என பிறகு தெரிவிக்கிறேன் என கூறினார்.

Tags:ADMK, DMK

முக்கிய செய்திகள்