'அட்ஜெஸ்ட் செய்தால் பகட்டாக வாழலாம்’ சேலம் அழகு நிலையத்தில் அரங்கேறிய ஷாக் சம்பவம்

அழகு நிலையத்துக்கு வேலைக்கு வந்த இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    சேலம் தாதாகபட்டி சீரங்கன் தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் லோகநாதன்-ரூபா தம்பதியர். இவர்கள் வீட்டிலேயே அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதனின் உறவினர் பெண்களான இரு இளம் பெண்கள் உள்பட மூவர் வேலை கேட்டு சென்றனர்.

    அவர்கள் மூவரையும் லோகநாதன் மற்றும் அவரது மனைவி ரூபா வேலைக்கு சேர்த்துக் கொண்டனர். பின்னர், அதிக பணம் சம்பாதித்து பகட்டான வாழ்க்கை வாழ தங்களிடம் ஐடியா உள்ளதாகவும், அதற்கு நீங்கள் மூவரும் கொஞ்சம் 'அஜஸ்ட்' செய்து கொண்டால் போதும் என ரூபா கூறியுள்ளார்.

    மேலும், பெரிய தொழிலதிபர்கள் தங்களிடம் வாடிக்கையாளர்களாக உள்ளதாகவும், தாங்கள் சொல்லும்போது அவர்களின் படுக்கையை பகிர்ந்தால் அதிக பணம் கிடைக்கும் எனக் கூறி மூவரையும் பாலியல் தொழிலுக்கு லோகநாதன்-ரூபா தம்பதி அழைத்து உள்ளனர்.

    இதற்கு மூன்று இளம் பெண்களும் மறுக்கவே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வேலைக்கு சென்ற மூவரையும், வீட்டிற்குள் அடைத்து வைத்து, கத்தியை காட்டி மிரட்டி நிர்வாணப்படுத்தி ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். வீடியோ பதிவு செய்யும் போது, தம்பதியர் மட்டுமல்லாமல் அவர்களுக்கு உடந்தையாக லோகநாதன் நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மூன்று பெண்களும் சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தியபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த போனில், இந்த மூன்று பெண்கள் இல்லாமல், மேலும் பல இளம்பெண்களின் ஆபாச படம் இருப்பது தெரியவந்தது.

    இதனால் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், லோகநாதன் மற்றும் ரூபா தம்பதியர், ஆண்டுக்கு ஒரு முறை, தாங்கள் வசிக்கும் பகுதியை மாற்றி கொண்டே இருந்துள்ளனர்.

    இது போன்று அழகு நிலையம் நடத்தி வருவதாக கூறி அங்கு வேலைக்கு வரும் இளம்பெண்களை ஆபாச படமெடுத்து அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிகிறது.

    மேலும் அந்த பெண்கள் தொழில் அதிபர்களுடன் ஒன்றாக இருக்கும்போது அதை ரகசியமாக வீடியோ பதிவு செய்தும் உள்ளனர். இந்த வீடியோ பதிவை வைத்து, தொழில் அதிர்பர்களை மிரட்டி பணம் பறித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சிவா, பிரதிப் ஆகியோரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லோகநாதனின் மனைவி ரூபா மற்றும் உடைந்தாக இருந்த லோகநாதனின் தந்தை ரகுராம் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதனிடையே லோகநாதன் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் உள்ளிட இருவர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் லோகநாதன் மற்றும் அவரது மனைவி ரூபா இருவரும் சேர்ந்து தங்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி வருவதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயபடுத்தி வருவதாகவும் கூறி இருந்தனர்.

    இதனை தொடர்ந்து அந்த புகாரின் அடிப்படையில் லோகநாதன் உள்ளிட்டவர்கள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வறுமையில் உள்ள இளம்பெண்களுக்கு வேலை தருவதாக கூறி, அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி, தொழில் அதிபர்களின் படுக்கையை பகிர வைக்க முயற்சித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Also read... குடும்பப் பெண்களை தேர்வு செய்து ஆபாசமாக மார்பிங்... பணம் கேட்டு மிரட்டல்...! சிக்கிய கல்லூரி மாணவன்


    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் \1\6இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:May 30, 2020, 13:48 IST