- News18 Tamil
- Last Updated: April 22, 2020, 21:37 IST
நான்கு வருடங்களாக ஊயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை கைவிட்டு விட்டு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய திட்டமிட்ட பொறியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் 24 வயதான விஷ்ணுகுமரன். பொறியியல் பட்டதாரியான விஷ்ணு சேலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் எந்திர சர்வீஸ் பிரில் பணியாற்றினார். இந்தநிலையில் விஷ்ணுகுமரனுக்கும், கந்தம்பட்டியை சேர்ந்த எம்.காம் பட்டதாரியான 23 வயதான சுபத்ரா என்ற பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தனது காதல் ரசம் சொட்டும் பேச்சால் சுபத்ராவை தனது காதல் வலையில் சிக்கவைத்த விஷ்ணு கடந்த நான்கு வருடங்களாக உருகி உருகி காதலித்துள்ளார். விரைவில் நாம் திருமணம் செய்து கொள்வோம் எப்போது உன்னை கைவிட மாட்டேன் என்று ஆசைவார்த்தைகளை கூறி பெண்ணை அழைத்து கொண்டு ஊர் சுற்றியுள்ளார் விஷ்ணு. நான்கு வருடங்களாக சுபத்ரா பின் பொட்டிப்பாம்பாக சுற்றிவந்த விஷ்ணு கடந்த சில மாதங்களாக சுபத்ராவின் செல்போன் அழைப்புகளை எடுக்காமல் இருந்துள்ளார்.
மேலும் விஷ்ணுவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக நண்பர்கள் மூலமாப சுபத்ராவுக்கு தகவல்கிடைத்துள்ளது. தகவலறிந்த சுபத்ரா தனது காதலன் விஷ்ணுவை பணி செய்யும் இடத்திற்கு சென்று நேரில் சந்தித்து திருமண ஏற்பாடுகளை பற்றிக் கேட்டுள்ளார்
ஆம் எனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளது. ஆகையால் நடந்தவற்றை ஒரு கனவாக நினைத்து மறந்து விடு என்று திரைப்பட வசனங்களை விஷ்ணு பேசியதாக தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த சுபத்ரா என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லிதானே இத்தனை நாள் ஏமாற்றினாய் என்றும் திருமணம் செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் சுபத்ராவை விஷ்ணு உதாசிணம் செய்ததாக தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த சுபத்ரா தன்னை திருமணம் செய்துகொள்வாதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக விஷ்ணுகுமார் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பொறியாளர் விஷ்ணு குமாரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்
திருமணம் வரை சென்றால் தான் அது காதலின் வெற்றி. ஆனால் சிலரோ ஆசைவார்த்தைகளிலே திருமணத்தை முடித்து தங்கள் ஆசைகளை தீர்த்த உடன் கைவிட்டு செல்வது தான் காதல் என்று உள்ளனர் அதற்கு இந்த செய்தி உதாரணம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் \1\6இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube