குடும்பப் பெண்களை தேர்வு செய்து ஆபாசமாக மார்பிங்... பணம் கேட்டு மிரட்டல்...! சிக்கிய கல்லூரி மாணவன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்பப் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசப் படத்துடன் சேர்த்து மார்பிங் செய்து 20,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பப் பெண்களை தேர்வு செய்து ஆபாசமாக மார்பிங்... பணம் கேட்டு மிரட்டல்...! சிக்கிய கல்லூரி மாணவன்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் ஒரு புகாரளித்தார்.

    அதில், ஒரு மர்ம நபர், முகநுாலில் தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசப் படத்துடன் இணைத்து மார்பிங் செய்து, அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, 20,000 ரூபாய் பணம் கேட்பதாக குறிப்பிட்டிருந்தார்.

    குறிப்பிட்ட வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்து அதில் பணத்தை செலுத்தும்படியும் அந்த மர்ம நபர் கூறியிருந்தாக புகாரில் தெரிவித்திருந்தார்.

    சைபர் கிரைம் பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரிக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டார். போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் பிடிபட்டார்.

    அவரிடம் விசாரித்தபோது, தனது நண்பன் ரோஹித் என்பவர்தான், வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்டதாகவும் 20 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வந்தால் தன்னிடம் தரும்படியும் சொன்னதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.

    அவரளித்த தகவல்களின்படி பரமக்குடி உலகநாதபுரத்தைச் சேர்ந்த ரோஹித் என்பவரைப் போலீசார் பிடித்தனர்; அவரிடம் போலீசார் விசாரித்தபோது பகீர் தகவல்கள் வெளியாகின. ரோஹித், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு கணிப்பொறி தொழில்நுட்ப பிரிவில் படித்து வருகிறார்.

    ஊரடங்கால், சொந்த ஊருக்குத் திரும்பிய ரோஹித், பொழுதுபோகாமல், இதுபோன்ற மிரட்டல் விளையாட்டுகளில் ஈடுபடலாம் என முடிவு செய்துள்ளார். முகநுாலில் 4 போலி கணக்குகளைத் தொடங்கிய ரோஹித் பரமக்குடி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பெண்களை முகநுாலில் தேடியுள்ளார்.

    அதில் ஒரு பெண் கிடைக்கவே, அவரது முகநுால் மெசஞ்சருக்கு மார்பிங் படத்தை அனுப்பி 20,000 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இந்த திட்டம் வெற்றியானால், தொடர்ந்து இதுபோல செய்து பணம் பறிக்கவும் ரோஹித் திட்டமிட்டிருந்தார்.

    ரோஹித்துக்கு இது முதல் முயற்சி என்பதால், சிக்கிக் கொண்டார் என்கின்றனர் போலீசார். ரோஹித் மீது தகவல் தொழில்நுட்பப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Also read... ஊருக்கு அனுப்புவதாக கூறி சென்னையில் வடஇந்தியர்களை ஏமாற்றும் கும்பல்!


    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் \1\6இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:May 30, 2020, 12:31 IST