முதுகுளத்தூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை உணவில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கைது, போலீசார் விசாரணை.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தைச் சேர்ந்த வினோபாராஜனுக்கும், கனிமொழிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தைகள் இல்லாமல் விரத்தியில் இருந்து உள்ளனர். இதையடுத்து மருமகள் கனிமொழிக்கு, மாமனார் முருகேசன் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
Also Read: சேரன் பாண்டியன் பட நடிகை சித்ரா காலமானார்
இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி இரவு மாமனாருக்கு உணவு கொடுக்கும்போது குழம்பில் எலிபேஸ்ட் மற்றும் கருணை மருந்து இரண்டையும் கலந்துக்கொடுத்துள்ளார்.அதனை சாப்பிட்ட முருகேசன் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மறுநாளே இறந்துவிட்டார். யாருக்கும் எதுவும் சந்தேகம் வராததால் முருகேசனுக்கு இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தது. உணவில் விஷம் வைத்து கொலை செய்த மருமகள் அதனை யாரிடமும் தெரிவிக்காமல் தொடர்ந்தும் மறைத்து வந்துள்ளார்.
Also Read: விஏஒ அலுவலகத்தில் விவசாயியை தாக்கிய விவகாரம்: வீடியோ வெளியிட்ட நபர் மீது வழக்கு பதிவு
மாமனாரை கொலை செய்ததால் மருமகள் கனிமொழி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலமாக கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் கீழத்தூவல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாமனாரை உணவில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கனிமொழியை கீழத்தூவல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் உணவில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: M.சர்க்கரை முனியசாமி (கமுதி)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Crime | குற்றச் செய்திகள், Murder, Sexual abuse, Sexual harasment