PREVNEXT
ஹோம் / நியூஸ் / தமிழ்நாடு /

புதுக்கோட்டையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - வழக்குப்பதிவில் காவல்துறையும் சேர்ப்பு

புதுக்கோட்டையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - வழக்குப்பதிவில் காவல்துறையும் சேர்ப்பு

 சிறுவன் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து வழக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து வழக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து வழக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நார்த்தாமலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் தளம் உள்ளது. இங்கு கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து வெளியேறிய தோட்டா ஒன்று பயிற்சித் தளத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த நார்த்தாமலை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இருந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவனின் தலையில் பாய்ந்தது.

Also Read: தோழிகளின் கிண்டல்.. மனஉளைச்சலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இதனையடுத்து அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அன்றைய தினமே சிறுவனின் இடது புற தலையின் பின்புறம் பாய்ந்த தோட்டா அகற்றப்பட்டு பின்னர் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுவன் புகழேந்தி நேற்று மாலை உயிரிழந்ததாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து நார்த்தாமலை மற்றும் கொத்தமங்கலப்பட்டி கிராம மக்களை அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் உயிரிழப்பிற்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் நீதி விசாரணை நடத்த வேண்டும், உயிரிழந்த சிறுவன் மிகவும் பின்தங்கிய ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவரது குடும்பத்திற்கு அதிகபட்ச இழப்பீடு தொகையை வழங்க வேண்டும், இனி ஒரு சம்பவம் அந்த பகுதியில் இதுபோன்று நிகழாமல் இருக்க துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை தற்காலிகமாக அல்லாமல் நிரந்தரமாக உடனடியாக மூட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Also Read: பணத்துக்காக பெண் மருத்துவர் செய்த காரியம் - ஆக்‌ஷனில் இறங்கிய ஆட்சியர்

மேலும் சிறுவன் பாதிக்கப்பட்டு ஐந்து தினங்கள் ஆகியும் சிறுவன் மீது பாய்ந்த தோட்டா மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடையதா அல்லது காவல் துறையினருடையதா என்பதை இது நாள் வரை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தெரிவிக்காததற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிறுவன் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து வழக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சம்பவம் நடந்த நாளன்று தமிழக காவல்துறையினரும் அந்த துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சி மேற்கொண்டதால் இந்த வழக்கில் தமிழக காவல்துறையும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags:Boy, Children death, Police, Pudhukottai

சிறந்த கதைகள்