திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு ஆடி மாத 9வது வார தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் 1008 சங்காபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதில் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் என விமர்சையாக நடைபெற்றது. சாமி வேடம் அணிந்த சாமிகள் கையில் வேலுடன் நடனம் ஆடினர்.
இதில் சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் செய்திருந்தார். மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க திருவேற்காடு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.பின்னர் கோவிலில் புதிதாக வைக்கப்பட்ட எல்இடி ஸ்கீரினை அமைச்சர் திறந்து வைத்தார்.
செய்தியாளர் : சோமசுந்தரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Chennai, Tamil Nadu