தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை எளிய மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது. இந்த பொருட்களை கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இருப்பினும், பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் அனைத்துப் பொருள்களும் இல்லையென்றும், தரமற்ற பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றும் புகார்கள் எழுந்தன.
இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவிளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமாரி என்பவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன் ரேசன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி உள்ளார். அதில் அவருக்கு 21 பொருட்களுக்கு பதிலாக 17 பொருட்கள் மட்டும் கடை ஊழியர் வழங்கி உள்ளதாக தெரிகிறது.
கிடைத்த பொருட்களை வீட்டிற்கு வாங்கி வந்த ஜெயகுமாரி பொருட்களை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். தொடர்ந்து இன்று காலை பொங்கல் வைப்பதற்காக தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து வீட்டு வாசலில் புதுப்பானையை வைத்து பொங்கல் வைக்க முயன்றுள்ளார்.
இனி மக்கள் குரலை எதிரொலிக்கும் போராளியாக திமுக இருக்கும் - திமுக அமைப்பாளர் சிவா!
அவரும் அதனை உறுதிசெய்ய நேரடியாக ஜெயகுமாரியின் வீட்டிற்கு வந்து பார்த்து உள்ளார். அப்போது அங்கு ஊசியுடன் இருந்த வெல்லத்தைக் கண்டு உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் வட்டவழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுகுறித்து கூறி உள்ளார்.
ஆனால் அதிகாரிகள் யாரும் இதுவரை வந்து பார்வையிடாமல் மெத்தன போக்கை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டுகின்றனர். மேலும் இந்த சர்க்கரையில் இருக்கும் ஊசி யாருக்கு பயன்படுத்தியதோ எப்படிபட்ட நோயாளிக்கு பயன்படுத்தியது என்பது எல்லாம் தெரியாது.
இதுபோன்ற தரக்குறைவான பொருட்களை அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதால் மக்களின் உடல்நலனில் பாதிப்புகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க வரும் நாட்களில் தமிழக அரசு வழங்கும் பொருட்களின் தரத்தை உறுதிசெய்த பின் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Kanyakumari, Pongal Gift