திருச்செந்தூர் உட்பட அறுபடை வீடுகளிலும் இன்று காலை கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை யாகசாலை பூஜையுடன் திருவிழா தொடங்கியது.
யாக பூஜையை அடுத்து, பக்தர்கள் கடலில் புனித நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க அனுமதி கிடையாது. மாற்று ஏற்பாடாக, பக்தர்கள் தங்கி விரதம் எடுப்பதற்காக, கோவில் அருகிலேயே ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 18 தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டபடி சுப்பிரமணியரை வழிபட்டனர். இந்த விழாவில், பக்தர்கள் ஆறு நாட்கள் கோவில் வளாகத்தில் தங்கி விரதமிருந்து வேண்டுதலை நிறைவேற்றுவர். வேல் வாங்கும் விழா 29ம் தேதியும், சூரசம்ஹாரம் 30ம் தேதியும் நடைபெற உள்ளது.
மேலும் இதே போன்று திருத்தணி, பழனி, சுவாமி மலை, பழமுதிர்சோலையிலும் கந்தசஷ்டி விழா விமரிசையாக தொடங்கியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Kandha Sashti, Murugan temple, Palani Murugan Temple, Tamilnadu