Home / News / tamil-nadu /

தொடங்கியது பட்டம் விடும் திருவிழா.. விரைவில் மாமல்லபுரத்தில் சர்ஃபிங்.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

தொடங்கியது பட்டம் விடும் திருவிழா.. விரைவில் மாமல்லபுரத்தில் சர்ஃபிங்.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

மாதிரி படம்

மாதிரி படம்

விழாவில் இந்தியாவிலிருந்து ஆறு அணிகளும் அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து நான்கு அணிகளும் பங்கேற்கின்றன

சென்னையில் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை சிறுகுறு நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ அன்பரசன், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்கள்.

சர்வதேச பட்டம் விடும் திருவிழா சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் துவக்கி வைக்கும் இந்த விழா இன்று முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் இந்தியாவிலிருந்து ஆறு அணிகளும் அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து நான்கு அணிகளும் பங்கேற்கின்றன. ஹீலியம் நிரப்பிய பல வடிவிலான பலூன்கள் தரையிலிருந்து அதிகபட்சம் 20 அடி வரை பறக்கும். திருவள்ளுவர், மாமல்லபுரம் கோயில் உள்ளிட்ட தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குளோபல் மீடியா பாக்ஸ் என்ற அமைப்பும் தமிழ்நாடு சுற்றுலா துறையும் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை ocean view விடுதியில் இந்த திருவிழா நடைபெறுகிறது. மாலை நேரங்களில் இசை கச்சேரி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது, “காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்று நாட்களுக்கு இந்த திருவிழா நடைபெறும். மாமல்லபுரத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் உள்ளது. கடலோரத்தில் இருக்கும் இந்த இடத்தில் இந்த திருவிழா நடத்த உகந்ததாக இருக்கும் என்பதால் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட துறை சுற்றுலாத்துறை ஆகும். இந்த பட்டங்கள் மாஞ்சா பட்டங்கள் அல்ல. நைலான் கயிறால் பறக்கிறது. பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த Hot air balloon திருவிழா, ஒமைக்ரான் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. வரும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது. மேலும், கடற்கரைப் பகுதிகளில் சாகச சர்பிங் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

சாகச, கேம்பிங் சுற்றுலா உள்ளிட்டவை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகியுள்ளது. விரைவில் முதலமைச்சர் அதனை வெளியிடவுள்ளார். மேலும் ஐகானிக் சிட்டி தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.

Tags:International, Minister