நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஸ்கார் மேளா' எனப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் 255 பேருக்கு மத்திய அரசு பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 25 பேருக்கு மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேரடியாக வழங்கினார். மற்ற 230 பேருக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டன.255 பேரில் தெற்கு ரயில்வே துறை பணிக்கு 85 பேரும், கடலோரக் காவல்படைக்கு 52 பேரும், பணியாளர் மாநில காப்பீடு நிறுவனத்தில் 25 பேரும்,சுங்கத்துறையில் 18 பேரும், இந்தியன் வங்கியில் 17 பேரும், வருமான வரித்துறையில் 15 பேரும், மத்திய ரிசர்வ் காவல் படையில் 10 பேரும், ஏனைய மத்திய அரசு துறைகளில் தலா ஒருவரும் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர். நியமன ஆணை பெற்ற 255 பேரில் 85 சதவீதத்தினர் தமிழர்கள்.
இதையும் படிங்க: ஆளுநர் ரவிக்கு எதிரான சிறு பொறிகள் பெருந்தீயாக மாறாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை- திமுகவின் முரசொலி எச்சரிக்கை
இதேபோல், கடலோர காவல்படையில் பணி ஆணை பெற்ற சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா முதலில் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கி, பின்னர் தமிழில் நான் பேசலாமா என அமைச்சரிடம் கேட்டார். அதற்கு 'சந்தோஷமாக நன்றாக தமிழில் பேசுங்கள்' என அமைச்சர் நிர்மலா தெரிவித்தார். இந்தி மொழி திணிப்பு, மும்மொழி கொள்கை தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே பூசல் நிலவி வரும் இந்த சூழலில், மத்திய அமைச்சர் தமிழிலில் பேச சொன்னது கவனம் பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Government jobs, Jobs, Nirmala Sitharaman, Tamil