PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Weather Update : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் 28ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேக மூட்டம்

மேக மூட்டம்

நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 3 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் 28ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:Chennai Rain, Rain Update, Weather News in Tamil

முக்கிய செய்திகள்