Home / News / tamil-nadu /

தமிழகத்தில் தலைதூக்கும் கொரோனா... கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை - தகவல்

தமிழகத்தில் தலைதூக்கும் கொரோனா... கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை - தகவல்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

கொரோனா பரவல் எதிரொலியாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் நேற்று 29524 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2069 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதையடுத்து பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது

பள்ளி வரும் மாணவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முக கவசம் அணிவது, பள்ளிக்கு வரும் போதே வளாகத்தில் உடல் வெப்ப நிலை பரிசோதிப்பது, தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது உள்ளிட்டவைகளை பள்ளி நிர்வாகம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் தனது கட்சி பொறுப்பை மாற்றிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி!

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினர். ஏற்கனவே முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், கொண்டு வரப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:CM MK Stalin, CoronaVirus