பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஒன்று சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது சுமார் ஒரு கிலோமட்டர் தூரம் வரை இயக்கப்பட்டதால் பரபரப்பு.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ள, கிராம பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலனோர் நகர பேருந்துகளில் பொள்ளாச்சி வந்து செல்கின்றன. இந்த நகரப்பேருந்துகள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. இதனால் தற்போது கிராமப்புறங்களில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் பயணிகள் கடும் அச்சம் அடைந்து வருகின்றனர்.
Also Read: திருடனாக மாறிய முன்னாள் போலீஸ்.. ஓடும் ரயிலில் தொடர் திருட்டு
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி கோவை சாலையில் ஒரு அரசு பேருந்து பயணிகளை ஏற்றி வரும் பொழுது திடீரென பழுதாகி சாலையில் நின்றதால் பேருந்து நகர முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அவ்வழியாக வந்த மற்ற பேருந்து ஓட்டுநர்களும் ஒன்றிணைந்து வெகுதூரம் தள்ளிச் சென்றனர். இதைக்கண்ட பயணிகளும் அப்பகுதியில் சென்ற பொதுமக்களும் அரசுப் பேருந்துக்கு ஏற்பட்ட நிலைமை இதுதான் என மனதில் எண்ணியவாறு சென்றனர்.
எனவே நகர பேருந்தை நம்பி கிராமப்புறங்களிலிருந்து வரும் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய போக்குவரத்துறை அதிகாரிகள் அரசு பேருந்து இயக்கத்தை முறைபடுத்தி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இதுபோன்ற அலட்சியப் போக்கால் பேருந்துகளை இயக்கி பொதுமக்களையும் அச்சத்தில் ஆளாகியும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தியும் வரும் ஓட்டுநர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Coimbatore, Govt Bus, Pollachi, Viral Video