திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பண மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த பெண் அளித்த புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா நேரில் ஆஜரானார்.
இலங்கையைச் சேர்ந்தவர் வித்ஜா. இவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்றுக்கொண்டு அங்குள்ள சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி, அன்பை காட்டி 71 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை வித்ஜா முன்வைத்தார். அந்த குற்றச்சாட்டில், ஆர்யா தான் சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல், பின்பு சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையும் படிங்க: நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பலத்த காயம்.. கவலையில் ரசிகர்கள்!
சாயிஷாவுடனான திருமணம் குறித்து ஆர்யாவிடம் வித்ஜா கேள்வி எழுப்பியபோது, சாயிஷாவின் பெற்றோர் தனது கடன்கள் அனைத்தையும் செலுத்துவதாக உறுதியளித்ததால் மட்டுமே அவர் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாக கூறியதாகவும், ஆறு மாதங்களுக்குள் சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் மட்டுமே, தான் அந்த திருமணத்துக்கு சம்மதித்ததாக வித்ஜா நீதிமன்ற வழக்கில் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: மெளனம் கலைத்த நயன்தாரா... நிச்சயதார்த்தத்தை ஒப்புக்கொண்ட வீடியோ!
இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதன் அடிப்படியில், ஆர்யா இன்று மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி புகார் தொடர்பாக விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Actor Arya, Chennai Police, News On Instagram