BA4, BA5 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் வயது வித்தியாச இல்லாமல் குழந்தைகள் முதல் அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மகளிர் சிறுநீர்வியல் துறை சார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதை துவக்கி வைத்த பின் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, 110 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
BA4, BA5 வகை கொரோனா வேகமாக பரவி வருகின்றன. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் வயது வித்தியாச இல்லாமல் குழந்தைகள் முதல் அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது. கொரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்தி சில மாதங்கள் ஆகி விட்டதால் அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கியுள்ளது.
எனவே பூஸ்டர் டோஸ் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
10க்கும் மேற்பட்டோர் கூடும் இடங்களில் சமூக இடைவெளி விட்டு நிகழ்வை நடத்துவது அவசியம். முக கவசம் போட்டுக் கொள்வது அவசியம். முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனையிலும் இது அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகள் கொரோனா விதிகளை பின்பற்றி பாதுகாக்க நடத்த வேண்டும். ஈரோடு சினை முட்டை விவகாரம் குறித்த விசாரணை பத்து நாட்களில் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். சென்னை மற்றும் மதுரையில் அரசு மருத்துவமனையில் கருத்தரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலர் செந்தில் குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் விஜயா, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Corona, Covid-19, Ma subramanian