• Home
  • »
  • News
  • »
  • tamil-nadu
  • »
  • Tamil Nadu Full Lockdown | முழு ஊரடங்கு உத்தரவுக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

Tamil Nadu Full Lockdown | முழு ஊரடங்கு உத்தரவுக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது வரவேற்க்கத்தக்கது என்று பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Full Lockdown | முழு ஊரடங்கு உத்தரவுக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
அன்புமணி ராமதாஸ்

    தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தின் நேற்றைய கொரோனா பாதிப்பு 26,000-த்தைக் கடந்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் வரும் 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும். பொதுப் போக்குவரத்துக்கு தடை ஆகியவை விதிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் 12 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கை பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை. தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இது தான் சிறந்த வழி.

    தொடர்புடைய செய்திகள்

    ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் திமுகவும் வலியுறுத்திய கோரிக்கை தான்.

    ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    377

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Karthick S
    First published:May 08, 2021, 14:36 IST

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube