PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமமுக வேட்பாளர்

அமமுக வேட்பாளர்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்ட  செயலாளர் சிவபிரசாந்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகான் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

மேலும் அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனையை டி.டி.வி தினகரன் மேற்கொண்டார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு(98) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த  வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

Tags:AMMK, TTV Dhinakaran

முக்கிய செய்திகள்