மதுரையில் மாட்டின் மீது ஆசிட் ஊற்றிய விஷமிகள் - கவனிப்பாரற்று வலியுடன் அலையும் கொடூரம்

மதுரை சூர்யா நகர் பகுதியில் கோவில் மாடுகள் தொந்தரவு செய்வதாக கூறி, சில கொடூரர்கள் அதன் மீது ஆசிட் ஊற்றியுள்ளனர். கால்நடைத்துறை சிகிச்சை அளிக்க முன்வராததால் மாடுகள் வலியுடன் சுற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மாட்டின் மீது ஆசிட் ஊற்றிய விஷமிகள் - கவனிப்பாரற்று வலியுடன் அலையும் கொடூரம்

மதுரை மாவட்டம் சூர்யா நகரில் உள்ள சுபாஷினி நகர் வடக்கு இரண்டாவது தெரிவில் சில கோவில் மாடுகள் சாலைகளில் சுற்றி வந்துள்ளன. இவை குடியிருப்போருக்கு தொந்தரவாக இருந்ததாக கூறி சில கொடூர மனம் படைத்தவர்கள், அந்த மாடுகள் மீது ஆசிட்டை ஊற்றி உள்ளனர்.

ஆசிட்டால் மாட்டின் முதுகு தோல் வெந்து அழுகிய நிலையில் உள்ளதை கவனித்து அக்கம் பக்கத்தினர், மாட்டின் நிலை குறித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

மேலும், உடனடியாக கால்நடைத்துறை மற்றும் புளூ கிராஸ் அமைப்பிடம் நேற்று மாலை புகார் அளித்துள்ளனர்.

படிக்க: தருமபுரியைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள DNC நிதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை... கணக்கில் வராத 6 கோடி ரூபாய் இதுவரை பறிமுதல்...

இதுவரை யாரும் வந்து மாடுகளை கவனித்து சிகிச்சை அளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பசியிலும், ஆசிட் ரணத்திலும் தவித்துக் கொண்டிருக்கும் மாடுகளை உடனே மீட்டு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற கால்நடைத்துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:March 28, 2021, 12:07 IST