குமரி மாவட்டம் சின்னத்துறை மற்றும் வள்ளவிளை சார்ந்த இரு விசைப் படகுகளில் இருந்து ரூ.1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின் லட்சத்தீவு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. குமரி மீனவர்கள் உட்பட கடத்தலில் ஈடுபட்ட 20 மீனவர்களை கைது செய்து விசாரணை.
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) மற்றும் இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், லட்சத்தீவு கடற் பகுதியில் சர்வதேச சந்தையில் சுமார் ₹1,526 கோடி மதிப்புள்ள மொத்தம் 218 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 'ஆபரேஷன் கோஜ்பீன்' என்ற பெயரில் நடத்திய விசாரணையில் குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான பிரின்ஸ் என்ற விசைப்படகு மற்றும் சின்னத்துறை பகுதியில் உள்ள லிட்டில் ஜீஸஸ் ஆகிய இரண்டு படகுகளில் இருந்து பதுக்கி வைத்திருந்த ஹெராயின் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட குமரி மீனவர்கள் உட்பட சுமார் 20 பேரை கொச்சி துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் குஜராத் பகுதியில் 205 கிலோ ஹீரோயின் பறிமுதல் செய்ததை தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் ஆழ்கடல் பகுதியில் வைத்து இரண்டு இந்திய படகுகளில் பெரிய அளவில் போதைப்பொருட்கள் கடத்தியதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது லட்சத்தீவு அருகே அகத்தி தீவில் இந்த இரண்டு படகுகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
1 கிலோ வீதம் 218 பாக்கெட்கள் இருந்தது. கடத்தலில் ஈடுபட்டத்தை ஒப்புக்கொண்ட மீனவர்கள் ஆனால் இது எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது ,எங்கு கொண்டு செல்லப்பட உள்ளது , பின்னணியில் இருக்கும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் யார் என்பதை பற்றி இன்னும் தகவல்கள் சொல்ல மறுக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் சர்வதேச சுற்றுலா தலமான குமரியில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை கொச்சியில் கொண்டு சென்று கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் பிடி தொழிலின் மறைவில் மீனவர்கள் வெளி நாட்டில் இருந்து பெரும் அளவில் ஹெராயின் கடத்தி கொண்டு வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Crime News, Drug addiction, Fishermen, Heroine, Kanyakumari, Smuggling, Tamil News