ருத்ராட்சம் உருவான கதை!

சிவ பெருமான் கண்ணீர்த் துளிகள் பூமியில் விழுந்தன. அதிலிருந்து தோன்றிய மரம் தான் ருத்ராட்ச மரம். ருத்ரனாகிய ஈசனின் கண்களிலிருந்து உண்டானதால் இந்த பெயர் வந்தது. ருத்ராட்சத்தை ஊற வைத்து .நீரை குடிக்கும் போது வாந்தி, இருமல், உடல் உஷ்ணம் தணிக்கக்கூடியதாக இருக்கிறது.

ருத்ராட்சம் உருவான கதை!
ருத்ராட்சம்

சிவ பக்தர்களுக்கு ருத்ராட்சம் தங்களின் உயிர் மூச்சாக கருதுகின்றனர். ருத்ராட்சம் ஒருவன் அணிந்து கொள்வதால் மனதில் குழப்பம் விலகி தெளிவு பெறும். மனம் மட்டுமல்லாமல் உடல் நலமும் ஏற்படும். இத்தகையை ருத்ராட்சம் உருவானது எப்படி என்பது மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

பூராண காலத்தில் தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன் மாலி என்ற மூன்று அரக்கர்கள் இருந்தனர்கள். இவர்கள் அரக்கர்களாக இருந்தாலும், அதீத சிவ பக்தியைக் கொண்டவர்கள். அசுர குரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனையை ஏற்று , அரக்க சாம்ராஜ்யத்தை மூவுலகிலும் ஏற்படுத்த சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். தங்களது, இரத்தத்தையே நெய்யாக்கி, தங்களது உடல் அங்கங்களையே விறகாக்கி இவர்கள் செய்த கடும் தவம் சிவ பெருமானை மிகவும் மகிழ்வித்தது. வேண்டிய வரம் தர சிவன் அவர்கள் முன் தோன்ற. அவர்கள் வேண்டிய படி அனைத்து வரங்களையும் தந்ததுடன் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று கோட்டைகளை இந்த மூன்று அரக்கர்களுக்கும் வழங்கினார்.

மேலும் படிக்க... Aadi Velli | ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு அள்ளி அள்ளிக் கொடுக்கும்...

தொடர்புடைய செய்திகள்

மேலும் பறந்து செல்லும் சக்தியும் அபூர்வமான அஸ்திரங்களையும் தன்னகத்தே கொண்டது அக்கோட்டை. அதன் துணையால் பறந்து சென்ற மூன்று அரக்கர்களும் மூவுலகங்களையும் கைப்பற்றினார்கள். தேவர்களின் திவ்ய அஸ்திரங்கள், அவர்களுக்கு சிவனார் அளித்த மூன்று கோட்டைகளுக்கு முன் ஒன்றும் இல்லாமல் ஆனது.

மேலும் படிக்க... வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

தேவர்கள் சிறைபட்டு அந்த அரக்கர்களால் சித்தரவதை செய்யப்பட்டனர் . சித்தரவதை பட்ட தேவர்கள் சிவனாரை வேண்டிக் கடும் தவம் இருக்க, சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான், அந்த மூன்று அரக்க ( சிவ ) பக்தர்களையும் கொல்ல ஒப்புக் கொண்டார். யுத்தத்துக்கு புறப்பட்டவர் கணபதியை வணங்காமல் சென்றதால், கணபதி சிவனாரின் தேர் அச்சை முறித்து விட்டார். சிவனார், இந்த அரக்கர்களை அழிக்க தன் புன்முறுவல் ஒன்றே போதும் என்று சிரிக்க, அந்த அரக்கர்களின் மூன்று கோட்டைகளும் பற்றி எரித்தது. அத்துடன் அந்த மூன்று அரக்கர்களும் சாம்பல் ஆனார்கள்.

அரக்கர்களாக இருந்தாலும் , அந்த மூவரும் உண்மையான சிவ பக்தர்கள் இதனால் சிவனின் மனம் இளகி அவருடைய கண்களில் இருந்து நீர் முத்து முத்தாக உதிர்ந்தது. அவ்விதம் உதிர்ந்த கண்ணீரே  ருத்ராக்ஷம் எனப் பெயர் பெற்றது . சத்தியத்தை காப்பற்றிய செய்கையில் வெளிப்பட்டது என்பதால் இதற்கு உலகைக் காப்பாற்றும் சக்தியும் உண்டு என சாஸ்திரங்கள் கூறுகிறது.

377

இதனை கழுத்தில் அணியும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், துன்பங்கள் நீங்கி இன்பமும் மெய்யான ஞானமும் சித்திக்கும். இந்த ருத்ராக்ஷத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக ஐதீகம். ஆனால், இதனை பருவப் பெண்கள் அணிதல் நேர் மாறான விளைவுகளைத் தரும். எனவே வயது வந்த பெண்கள் அணிதல் கூடாது.

மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

ருத்ராட்சம் தரும் மனக் கட்டுப்பாடுச் சக்தி

ருத்ராட்சத்துக்கு, மனதை அடக்கி, மனக் கட்டுப்பாட்டை வளர்க்கும் அபூர்வ ஆற்றல் இருக்கிறது. இதை அணிபவர்கள், இதனை உணர்வுப்பூர்வமாக அறியலாம். ருத்ராட்சத்துக்கு நினைவு ஆற்றலை அதிகரிக்க செய்யும் அற்புத சக்தியும், சுய ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் திறனும் உண்டு. ருத்ராட்சத்துக்கு இருக்கும் இந்த சக்தியை சிலர் உடனடியாக உணரலாம். சிலர் படிப்படியாக உணர்கிறார்கள்.

ருத்ராட்சம், இயற்கையாகவே, ஒரு முகம் முதல் 21 முகங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. ருத்ராட்ச கொட்டையின் மேற்பகுதியில் உள்ள கோடுகளைக் கொண்டு அது எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.

மேலும் படிக்க... ராஜஸ்தானில் உருவாகும் 351 அடி உயர சிவன் சிலை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துளையுள்ள ஒரே விதை

வேறு எந்த ஒரு விதைக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு ருத்ராட்ச விதைக்கு உண்டு. துளசி, ஸ்படிக மாலைகள் நாம் துளையிட்ட பிறகே அதை கோர்த்து நாம் அணிந்து கொள்ள முடியும்.

ஆனால் ருத்ராட்சத்தை மனிதர்களால் எளிதில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இயற்கையாகவே இறைவனின் அருளால் ருத்ராட்சத்தில் நடுவே துளையுடன் இருக்கிறது.

ருத்ராட்சம் தரும் அற்புத பலன்கள்

இந்த ருத்ராட்ச மரம் நேபாளம், ஜாவா தீவு, பெங்களூருவில் வளர்கிறது. பல்வேறு அற்புத பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும் ருத்ராட்சம் பல வியாதிகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. ருத்ராட்சத்தை ஊற வைத்து அந்த நீரில் மஞ்சள் பொடி சேர்த்துக் குடிக்கும் போது வாந்தி, இருமல் நீக்க வல்லதாக இருக்கிறது. மேலும் உடல் உஷ்ணம் தணிக்கக்கூடியதாக இருக்கிறது.

Published by:Vaijayanthi S
First published:August 12, 2021, 12:47 IST

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube