Home / News / spiritual /

நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட எளிய பரிகாரங்கள்

நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட எளிய பரிகாரங்கள்

அகத்தி கீரை

அகத்தி கீரை

பசுவிற்கு அகத்தி கீரை, பச்சரிசி , வெல்லம் கொடுத்தல்,கோவிலில் உள்ள விளக்கிற்கு எண்ணெய்  ஊற்றுதல் இவை அனைத்தும் சிறந்த பலனை கொடுக்கும். 

நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட சில பரிகாரங்களை தொடர்ந்து செய்தால் நம்முடைய கஷ்டங்களின் தாக்கம் குறையும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அவற்றை பற்றி இங்கு தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

காகத்திற்கு உணவு அளித்தல் சிறந்தது. இதை நாம் நிறைய வீடுகளில் பாத்திருப்போம். அதுபோல பறவைகளுக்கு தாகம் தீர மாடியில் நீர் வைத்தல். பசுவிற்கு அகத்தி கீரை, பச்சரிசி , வெல்லம் கொடுத்தல்,கோவிலில் உள்ள விளக்கிற்கு எண்ணெய்  ஊற்றுதல் இவை அனைத்தும் சிறந்த பலனை கொடுக்கும்.

மேலும் படிக்க...  இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 10, 2021)

அதுபோலவே எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். எறும்பிற்கு உணவு அளித்தால் 108 பிராமிணர்கள் சாப்பிடுவதற்கு சமம் என்பார்கள். இதனால் நாம் செய்த ஏழேழு ஜென்ம பாவங்களும் போய்விடும் என்பது நம்பிக்கை.

அகத்தி கீரை

கோவில்களுக்கு செல்லும் போது அங்கு குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி அளித்தல் நல்லது. மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் அங்கு வரும் பக்தர்கள் பொரி வாங்கி மீன்களுக்கு போடுவார். இதனை அங்கு வரும் பக்தர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர் என்பது குரிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...  திருநீறு அணிந்து கொள்ளும் முறைகள்!

சில மலைக் கோவிகளில் குரங்குகள் நிறைய இருக்கும் . அதற்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு உணவு , உடை அளிக்க வேண்டும். அரச மரத்திற்கு நீர் ஊற்றுதல் . அன்ன தானம் , நீர் பந்தல் போன்றவைகளை செய்தல் வேண்டும்."நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்பது போல ஒருவனுக்கு வயிறார உணவு கொடுப்பதும் , தாகம் என்று வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதும் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது .

பச்சரிசியை உண்ணும் எறும்புகள்

சித்திரை மாதத்தில் வரும் மதுரை சித்திரை திருவிழா காலத்தில் மக்கள் நீர் மோர் கொடுத்தும், நீர் கொடுத்தும் புண்ணியத்தை சேர்ப்பர். அதனை தற்போது தென் மாவட்ட மக்கள் செய்து வருகின்றனர். கொரோனா காலமாக இருந்தாலும் ஏழை எளியவர்களுக்காக இதனை செய்து வருகின்றனர். அதிலும் ஊரடங்கின் போது எஈர் மோருடன் உணவு பொட்டலங்களிம் சேர்த்து வழங்கினர்.

377

மேலும் படிக்க...  ஏழு ஜென்ம பாவங்களை போக்க வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Tags:Hindu Temple