PREVNEXT
முகப்பு / செய்தி / ஆன்மிகம் / திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

Tiruchendur| திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா சிகர  நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து தேர் வடம்படித்து இழுத்தனார்.

திருச்செந்தூர் மாசி திருவிழா

திருச்செந்தூர் மாசி திருவிழா

உலகப் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுமான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா கடந்த 25ந்தேதி  கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான மாசி திருவிழா 12 நாட்கள் நடைபெறும் .

அதன்படி இந்த திருவிழாவின் தொடக்கமாக கொடியேற்ற விழா கடந்த 25ந்தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் இரட்டை மூலவர்களில் ஒருவரான சண்முகர் எதா ஸ்தானத்திலிருந்து  எழுந்துருளி கோவில் திருவீதிகளில் உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.

கடந்த  3 ம் தேதி 7ம் திரு நாள் அன்று, காலையில் சண்முகர் உருக சட்ட சேவையும் தொடர்ந்து  வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் சண்முகர் தங்கச்சப்ரத்தில் எழுந்தருளி சிவப்பு சாத்து திருவீதி உலாவும்  8ம் திருநாளில் 4ந் தேதி    வெள்ளிச் சப்ரத்தில் வெள்ளை சாத்து திருவீதி உலாவும் நடைபெற்றது.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்

ஸ்டெர்லைட் கலவரம்: ‘துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் எங்கள் கண் முன்னே நடமாடுகிறார்கள்’

நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

“அரசியல் என்பது பல்கலைகழகம்... நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்...” பாடலாசிரியர் பா.விஜய் ஓப்பன் டாக்..!

கண்மாய் நீரில் மூழ்கி 3பள்ளி மாணவர்கள் மரணம்.. விளாத்திகுளத்தில் நிகழ்ந்த சோகம்...

“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி

டாஸ்மாக்கில் கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்... கோவில்பட்டியில் பகீர் சம்பவம்!

82 மூட்டைகளில் 2,000 கிலோ கஞ்சா... தூத்துக்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்த போலீஸ்...!

போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை

கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..

தொடர்ந்து பச்சை கடசல் சப்பரத்தில் சண்முகர் பச்சை சாத்தி  சிறுகோளத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. மார்ச்  ஆறாம் தேதி யும்  10ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. சுவாமி குமர விடங்க பெருமான்  வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருவினார். முதலில்  சிறப்பு பூஜைகளுக்கு பின் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது.

நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி விநாயகர் தேர் நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து பக்தர்களால் குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமியின் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. சுவாமி குமர விடங்க பெருமான் தேரை தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளியுள்ள திருத்தேர்  பக்தர்களால் இழுக்கப்பட்டது.

இதில் பக்தர்களால் அரோகரா முருகா கோஷங்கள் விண்ணை முட்டியது. சுவாமி சன்னதி முன் தொடங்கி கீழ ரத  வீதி,  தெற்கு ரத வீதி, மேலரத வீதி வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர்  நிலையத்தை வந்து சேர்ந்தது . காலை ஏழு முப்பது மணி அளவில் சுவாமியின் திருத்தேர் வடம் பிடித்து எடுக்கப்பட்ட நிலையில் 10 மணி அளவில் தேர் நிலையம் வந்து சேர்ந்தது .

தேர் திருவிழாவை ஒட்டி உள்ளூர் மக்கள் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான வெளியூர் மக்களும் திருச்செந்தூரில் அதிகாலையிலேயே குழுமி இருந்தனர். இதனை ஒட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

377

அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.  அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள்  கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.  11வது திருநாளான நாளை  இரவில்  தெப்ப உற்சவம்  நடைபெற  உள்ளது.

இந்த தேர்த்திருவிழாவில் கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன் அறங்காவலர் குழு தலைவர்  அருள் முருகன் உள்ளிட்டோரும் அற நிலையத்துறை  அதிகாரிகள்,  பக்தர்க.ள் கலந்து கொண்டனர்.

கோயிலுக்கு சென்றால் இப்படித்தான் வழிபட வேண்டும்..

தேர் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  வாகனங்களில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியும் நடைபெற்றது

Tags:Masi Magam, Murugan, Thoothukudi

முக்கிய செய்திகள்