வீட்டில் இருக்கும் குறைகள் நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருக செய்ய மகாலட்சுமி தேவியை எப்படி வணங்குவது என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க...
1. வீட்டின் பூஜை அறையில் மகாலட்சுமி எந்திரத்தை வைத்து பூஜித்து வழிபடவும்.
2. லட்சுமிதேவி வெள்ளை நிற பொருட்களில் நிரம்பி இருக்கிறார் என்பதால். வெள்ளியில் சிலை அல்லது வெள்ளை நிற பிரசாத பொருட்களை செய்து படைத்து வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளை அணியலாம்.
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் :
1 திருமால் மார்பு
2 பசுவின் பின்புறம்
3 யானையின் மத்தகம்
4 தாமரை
5 திருவிளக்கு
6 சந்தனம்
7 தாம்பூலம்(வெற்றிலை )
8 கோமயம்
9 கன்னிப்பெண்கள்
10 உள்ளங்கை
11 பசுமாட்டின் கால்தூசு
12 வேள்விப்புகை
13 சங்கு
14 வில்வமரம்
15 நெல்லி மரம்
16 தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்
17 வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்
18 கலகமில்லாத மகளிர் வாழும் இடம்
19 தானியக் குவியல்
20 கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்
21 பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்கள்
22 பகிர்ந்துண்டு வாழும் மனிதர்கள்
23 நாவடக்கம் உள்ளவர்கள்
24 மிதமாக உண்பவர்கள்
25 பெண்களைத் தெய்வமாக நடத்தும் குடும்பம்கள்
26 தூய்மையான ஆடை அணிகிறவர்கள்
மேற்கண்ட இவை அனைத்துமே மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் தான். காலையில் எழுந்தவுடன் மேற்கண்டவற்றை பார்த்து எழுவது நல்லது.
பெண்கள் செய்ய வேண்டியவை
மேலும் பெண்கள் நிறைய ஜொலிக்கும் வளையல்களை அணிந்து கொள்வது, மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் மோதிர விரலால் சிவப்பு நிற குங்குமம் இடுவது, கணவனிடம் அன்பாக இருப்பது, அன்னத்தை இடது கைகளால் பரிமாறாமல் இருப்பது , இடது கைகளால் செல்வத்தை பெறுவது , தருவது போன்ற செயல்கள் செய்யாமல் தவிர்ப்பது , ஒற்றை கால்களில் நிற்காமல் இருப்பது , கோவில்களில் அமர்ந்து தாலி கயிற்றை மாற்றி கொள்வது , அழுக்கான உடைகளை அணிவதை தவிர்ப்பது போன்ற செயல்கள் செல்வ வளத்தை பெண்களுக்கு தரும்.
மேலும் படிக்க...கோகுலாஷ்டமி நாளில் விரதம் இருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற சாப்பிட வேண்டிய உணவுகள்..!
ஆண்கள் செய்ய வேண்டியவை
பெண்களை துன்புருத்தி அல்லது வேதனை படுத்தி கண்களில் நீர் வரவைப்பது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது,செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பெண்களிடம் சண்டை போடாமல் இருப்பது , மல்லிகை (வாசமான ) மலர்களை மனைவிக்கு அணிவிப்பது, பண இருப்பை உடலின் முன்பக்கத்தில் (தொடை ,மார்பகம் ) வைத்துக் கொள்வது, இவைகளையெல்லாம் ஆண்கள் பின்பற்றும் பொழுது மகாலட்சுமியின் ஆசிகள் கிடைக்கும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.
மேலும் படிக்க... Krishna Janmashtami 2021: கிருஷ்ண ஜெயந்தி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...
புராணத்தில்
புராண நம்பிக்கையின் படி லட்சுமி தேவி சங்கு, மாட்டு சாணம், நெல்லிக்கனி மற்றும் வெள்ளை நிற பொருட்களில் வசிக்கக்கூடியவர். அதனால் வீட்டின் பிரதான வாசலில் சங்கு பதிப்பது நல்லது. அல்லது வீட்டில் பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபடலாம்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், அன்றைய தினத்தில் சிறப்பு பூஜை செய்யலாம். பசு நெய் ஊற்றி இரண்டு முக விளக்கு ஏற்றி வழிபடவும். இதனால் மகா லட்சுமியின் ஆசி கிடைத்து செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Temple