PREVNEXT
முகப்பு / செய்தி / ஆன்மிகம் / திருப்பதி: ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எத்தனை கோடிகள் தெரியுமா?

திருப்பதி: ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எத்தனை கோடிகள் தெரியுமா?

ஏழுமலையானுக்கு பக்தர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

திருப்பதி

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

நாட்டின் முக்கிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் திருப்பதிக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

கொரோனா காலத்தில் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்த முடியாத பணத்தை எல்லாம் தற்போது உண்டியல் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். 2022-23 நிதி ஆண்டில் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் 1,100 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதத்தில் மட்டுமே 1192 கோடியே 81 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் ஏழுமலையானுக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு துவங்கியது முதல்

ஜனவரி மாதம் 79 கோடியே 39 லட்சம் ரூபாயும்

பிப்ரவரி மாதம் 79 கோடியே 34 லட்ச ரூபாயும்

377

மார்ச் மாதம் 128 கோடியே 60 லட்சம் ரூபாயும்

ஏப்ரல் மாதம் 126 கோடியே 65 லட்ச ரூபாயும்

மே மாதம் 130 கோடியே 29 லட்ச ரூபாயும்

ஜூன் மாதம் 123 கோடியே 76 லட்ச ரூபாயும்

ஜூலை மாதம் 139 கோடியே 75 லட்ச ரூபாயும்

ஆகஸ்ட் மாதம் 140 கோடியே 34 லட்ச ரூபாயும்

செப்டம்பர் மாதம் 122 கோடியே 19 லட்ச ரூபாயும்

அக்டோபர் மாதம் 122 கோடியே 80 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் கடந்த 10 மாதங்களில் 1193 கோடியை 11 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக ஏழுமலையானுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

Also see...திருப்பதி தரிசன நேரத்தில் மாற்றம்... டிசம்பர் முதல் அமலாகும் புதிய விதி!

நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை மேலும் சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே நடப்பு நிதி ஆண்டில் ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை வசூல் சாதனை படைக்க இருப்பது உறுதி.

Tags:Tirumala Tirupati

முக்கிய செய்திகள்