Home / News / salem /

தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் இலவச பூஸ்டர் தடுப்பூசி - அமைச்சர் சுப்ரமணியன்

தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் இலவச பூஸ்டர் தடுப்பூசி - அமைச்சர் சுப்ரமணியன்

கோவிட் தடுப்பூசி

கோவிட் தடுப்பூசி

Corona Vaccine | தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்புடன் பொதுமக்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். மருத்துவ படிப்பை நிறைவு செய்த 107 பேருக்கு பட்டங்களை அவர் வழங்கினார். விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அவ்வப்போது கழுவுதல் போன்ற விதிமுறைகள் அமலில் உள்ளன. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மற்றும் அரசின் விதிமுறைகள் கடைப்பிடிப்பதன் மூலமாகவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தமிழகத்தில் 700 ஐ தாண்டி கொரனா தொற்று உள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களில் 95 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 5 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. பொதுமக்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனை வளாகங்களிலேயே சித்தா கொரோனா கேர் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறார். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 95 சதவீதம் பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 85 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர், முதல் தவணை கூட செலுத்திக் கொள்ளாமல் 39 லட்சம் பேரும், 2-ம் தவணை செலுத்தாமல் 1.12 கோடி பேரும் உள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து (சேலம்)

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை

உயிருடன் உள்ள மூதாட்டிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு சான்றிதழ் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர்!

அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்த திமுக -அதிமுகவினர் மோதல்.. ஆத்தூரில் பரபரப்பு

எடப்பாடி அருகே இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை...

ஆடிப்பெருக்கு : மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபட்ட பொதுமக்கள்

சொந்த மாமாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சகோதரர்கள் - ஆத்தூர் அருகே பயங்கரம்

சேலத்தில் இருப்பது புத்தர் சிலைதான்... உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் தொடரும் தலைவெட்டி முனியப்பன் பூஜை...

வீரபத்திரன் சுவாமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன வழிபாடு

ஆடிப்பெருக்கு: நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரியில் இறங்க கட்டுப்பாடு.. மீறினால் நடவடிக்கை.. ஆட்சியர் எச்சரிக்கை!!

காவல் நிலையத்தில் தொடங்கிய உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி...

மாணவியை விடுதிக்கு அழைத்து பாலியல் தொல்லை...பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

முதல் தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி பூஸ்டர்  தடுப்பூசி செலுத்தி கொள்ள வலியுறுத்தி வருகின்றோம். மெகா தடுப்பூசி முகாமகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடத்திட உள்ளதாகவும் இதில் முதல், இரண்டாம் தடுப்பூசி செலுத்ததவர்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நான் பொதுக்குழுவில் கலந்துகொள்வேன்.. ஆனால்... - ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்

தமிழகத்தில் 86 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி போன்று பூஸ்டர்  ஊசியும் இலவசமாக செலுத்த மத்திய  அரசை வலியுறுத்தி வருவதாகவும் தற்போது புது முயற்சியாக தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தனியார் பங்களிப்போடு CSR முறையில் இலவசமாக பூஸ்டர் ஊசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கரு முட்டை விவகாரத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை அதிகாரியின் அறிக்கை வந்தவுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். செயற்கை முறை கருத்தரிப்பு வணிகமயமாவதை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் திருச்சியில் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை மையம் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட உள்ளது. முதல்வர் நலமுடன் உள்ளதாகவும் நாளை அலுவலகத்திற்கு வருகை தர உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

சேலம், திருச்சி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது மாணவர் சேர்க்கை தலா 100 இடங்கள் என்பதை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களை 250 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

 

Tags:Corona Vaccine, Salem