PREVNEXT
முகப்பு / செய்தி / ராணிப்பேட்டை / ''மகளிடம் இப்படி நடந்துகொள்ளுங்கள்''அறிவுரை கூறிய மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்!

''மகளிடம் இப்படி நடந்துகொள்ளுங்கள்''அறிவுரை கூறிய மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்!

Ranipet | அடிக்கடி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததால் மருமகனுக்கு மாமனார் குடும்பத்தினர் முன்னிலையில் அறிவுரை வழங்கினார்.

மாமனார் - மருமகன்

மாமனார் - மருமகன்

ராணிப்பேட்டை அருகே மகளின் கவலையை போக்க அறிவுரை கூறிய மாமனாரை, அடித்தே கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மலை அடிவாரத்தில் உள்ள அம்சாநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில்(45). வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 4 மகள்கள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இஸ்மாயிலின் மூத்த மகள் ஷபியாபானுவிற்கு அதே பகுதியை சேர்ந்த ரஹ்மதுல்லா என்பவரோடு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து (ராணிப்பேட்டை)

தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டிய நிலஅளவையர்.. அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

பாம்பை கடித்து துப்பி வீடியோ பதிவிட்ட இளைஞர்கள்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!

படிக்கட்டு பயணத்தால் சண்டை.. டிரைவரை தாக்கி ரத்தம் சொட்ட வைத்த மாணவன்..!

ராணிப்பேட்டையில் ஊறவைத்த அரிசியைச் சாப்பிட்ட 2 ஆம் வகுப்பு சிறுமி பலி..

சாம்பாரில் விஷம் கலந்த 13வயது சிறுவன்.. பக்கத்து வீட்டு குடும்பத்தையே தீர்த்துக் கட்டத் திட்டம்.. அதிர்ச்சி வாக்குமூலம்!

பூட்டி இருக்கும் வீடுதான் டார்க்கெட்.. ஸ்கெட்ச் போட்டு திருடும் தம்பதி - அரக்கோணத்தில் அதிர்ச்சி

முகவரி கேட்பதுபோல் நடித்து சைக்கிளில் சென்ற சிறுமியிடம் சில்மிஷம்: சிறுமியின் சாமர்த்தியத்தால் சிக்கிய வாலிபர்!

நடத்தையில் சந்தேகம்.. கணவனை அரிவாள்மனையால் வெட்டிக்கொன்ற மனைவி.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்

ரூ.500 கொடுத்தால் ரூ.2,000 மதிப்புள்ள மளிகை பொருட்கள்... திறந்து பார்த்தால் அதிர்ச்சி... கணவன்-மனைவி கைது..!

ராணிப்பேட்டை : சொத்து தகராறில் அண்ணன் வீட்டை இடித்து தள்ளிய தம்பிகள்..

தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற மகன்- ராணிப்பேட்டையில் கொடூரம்

ரஹ்மதுல்லா ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார்.

ஷபியாபானுவிற்கு ஒரு மகன் உள்ள நிலையில் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில மாதங்களாக கணவர் ரஹ்மதுல்லா ஓட்டுநர் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையானதோடு ரஹ்மதுல்லாவின் நடவடிக்கைகளில் அதிகளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவ்வப்போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இது மட்டுமில்லாமல் ரஹ்மத்துல்லா, சின்ன சின்ன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

377

இதையும் படிங்க | ஏசி வேலை செய்யாததால் ரயிலை நிறுத்திய பயணிகள்.. அரக்கோணத்தில் பரபரப்பு!

இதனால் மனமடைந்த ஷபியாபானு, இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக மருமகனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய இஸ்மாயில், தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இஸ்மாயில் தனது குடும்பத்தினர் முன்னிலையில் மருமகன் ரஹ்மத்துல்லாவிற்கு அறிவுரை கூறியுள்ளார். இதில் குடிபோதையில் ஆத்திரமடைந்த மருமகன் ரஹ்மத்துல்லா, திடீரென நாற்காலியில் அமர்ந்திருந்த மாமனார் இஸ்மாயிலை கண்மூடித்தனமாக தாக்க தொடங்கியுள்ளார்.

இர்ரெகுலர் பீரியட்ஸுக்கு குட்பை சொல்லும் டாப் 5 உணவுகள்..!

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு குடும்பத்தினர் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, ரஹ்மதுல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: க.சிவா, ராணிப்பேட்டை.

Tags:Crime News, Murder, Ranipettai

முக்கிய செய்திகள்