PREVNEXT
முகப்பு / செய்தி / புதுச்சேரி / ’கோன் பனேகா குரோர்பதி...’ : அமிதாப் பச்சன் பெயரில் பண மோசடி! - புதுச்சேரியில் நடந்த பகீர் சம்பவம்!

’கோன் பனேகா குரோர்பதி...’ : அமிதாப் பச்சன் பெயரில் பண மோசடி! - புதுச்சேரியில் நடந்த பகீர் சம்பவம்!

Puducherry News : இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் ஆன்லைன் விளையாட்டில் கார் பரிசு விழுந்தாக கூறி வட்டிக்கடைக்காரரிடம் பணம் பறிப்பு.

அமிதாப் பச்சன் பெயரில் பண மோசடி

அமிதாப் பச்சன் பெயரில் பண மோசடி

புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பம் சாலையில் வட்டிக்கடை நடத்தி வரும் வட மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் சேட்  நடிகர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர்.

இந்நிலையில், கடந்த மாதம் இவர் இணையத்தில் தேடி கொண்டிருந்தபோது இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெயரில்  ஆன்லைனில் கே.பி.சி (KBC) என்ற ஆன்லைன் கேம்மில்   விளையாட அழைப்பு வந்தது.

இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் பெயரில் போலியாக இந்த செயலி இயக்கப்படுகிறது. அமிதாப்பச்சன் நடத்திய “கோன்பனேகா  குரோர்பதி”  என்ற பெயரில் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து (புதுச்சேரி)

புதுச்சேரி ஒலக்கூர் அகத்தீஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

புதுவை சடையாண்டி ஐயனாரப்பன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்..

மதுவிலக்கு கோரி புதுவை கடற்கரை சாலையில் மகாத்மா காந்தி வேடமணிந்து விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுச்சேரி அருகே தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி - சிறப்புகள் என்ன?

ஊழியர்கள் அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபரீதம்.. புதுச்சேரியில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்..

சாலையில் கேட்பாரற்று கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. ஒப்படைத்தவர்களை பாராட்டிய புதுச்சேரி காவல்துறை..

சிலை வைத்த பிரெஞ்சுக்காரர்கள்.. புதுச்சேரியில் ஆயி குளத்தை உருவாக்கிய ஆயி அம்மையார் பற்றி தெரியுமா?

புதுச்சேரி பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? - இதோ வழிமுறை!

கட்டுமான பணி நடக்கும்போதே இடிந்து விழுந்த சட்டமன்ற உறுப்பினர் கட்டிடம்..

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே.. புதுச்சேரியில் இனிமையான குரலில் பாடி அசத்தும் திருநங்கை கோபிகா..

BIS ஹால்மார்க் தங்கம் விற்பனை.. புதுச்சேரி நகைக்கடை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு!

இந்தியில் மட்டுமே கேள்விகள் எழுப்பப்படுகின்றன. முதல் கேள்வி பதிலளித்தவுடன் 500 ரூபாய் பரிசு அறிவிக்கப்படுகிறது. இரண்டாவது கேள்விக்கு 3,000 ரூபாய் என படிப்படியாக ஐந்தாயிரம் வரை செல்கிறது.

இதையும் படிங்க : ''மகளிடம் இப்படி நடந்துகொள்ளுங்கள்''அறிவுரை கூறிய மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்!

எளிமையாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களுக்கு ஆசையை தூண்டும் வகையில் தங்களுக்கான பரிசு தபால் மூலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

அதே வகையில் சுரேஷுக்கு கொரியர் மூலம் ஒரு கவர் வந்தது. அதில் சுரேஷுக்கு விலை உயர்ந்த கார் பரிசாக  கிடைத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி அவர் காரை பெறுவதற்கு ஆசையில் மீண்டும் ஆன்லைன் கேம்முக்குள் சென்றார்.

அப்போது அவருக்கு காருக்கான ஜி.எஸ்.டி வரி, சேவை வரி என பணம் அனுப்புமாறு கேட்டு 40 ஆயிரம் ரூபாய் வரை கரந்துள்ளனர். தங்களது பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் 49,500 கட்டினால் கார் வீடு தேடி வரும் என அறிவிப்பு வந்தது.

இதன்பிறகு தான் அவர் விழித்துக்கொண்டு அரியாங்குப்பம் காவல் நிலையத்தில்  புகார் செய்தார். அப்போது தான்  ஆன்லைன் கேம் மூலம் பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கியது தெரியவந்தது.

இன்ஸ்டாவில் வீடியோ பார்க்க பிடிக்கலையா..? உங்களுக்காக சூப்பரான 5 ஆப்ஸ்..

377

பிரபல நடிகர்கள் ஆன்லைன்  விளையாட்டிற்கும் தங்களும்   சம்பந்தமும் இல்லை என அறிவித்தாலும், ஆன்லைன் மூலம் அவர்களது பெயர்களை பயன்படுத்தி விளையாட்டு என்ற பெயரில் லட்சக்கணக்கில் பலரிடம் மோசடி வசூல் தொடர்கிறது.

இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை கண்காணிப்பாளர் ரவிக்குமார் அறிவித்துள்ளார். மேலும் இந்தி மொழி பேசுபவர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த மோசடி குறித்து காவல்துறை தீவிர கவனத்தில் கொண்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் இழப்பவர்கள் 2,000 ரூபாய், 3,000 ரூபாய் என மிக குறைவாக இருந்தாலும் அவமானமான கருதி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்காமல் உள்ளனர். இதனால் ஆன்லைனில் பணம் பறிப்பவர்கள் தொடர்ந்து பணத்தை பறித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி செய்தியாளர் - இளவமுதன்

Tags:Crime News, Local News, Online Frauds, Puducherry

முக்கிய செய்திகள்