56 வயதான கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், கடந்த 17 ஆண்டுகளாக அடர்ந்த வனத்தில் தனது அம்பாசடர் காரில் வாழ்ந்து வருகிறார்.
தட்சிண கன்னட மாவட்டம், சல்லியா தாலுகா அரந்தோடு அருகே உள்ள அடலே மற்றும் நெக்கரே என்ற இரு கிராமங்களுக்கு இடையே அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது. நகர வாழ்க்கையைத் துறந்து, இந்த வனத்தின் நடுப்பகுதிக்கு, 56 வயதான சந்திரசேகர் இடம் பெயர்ந்தார். இவரைப் பற்றிய முழுக் கதையும் அறிந்தால், சந்திரசேகர் 'தன்னைத் தானே விலக்கிக் கொண்டார், என்று அனைவரும் கூறுவார்கள்.
இவரின் வசிப்பிடத்தை அடைவது கொஞ்சம் கடினமானது தான். காட்டுக்குள் 3-4 கிமீ தூரம் நடக்க வேண்டும். சிறிது தூரம் சென்ற பிறகு, மூங்கில் கம்புகள் தாங்கியிருக்கும் ஒரு சிறிய பிளாஸ்டிக் தாள் தெரியும். அதன் அருகில், ஒரு பழைய வெள்ளை அம்பாசிடர் காரும், அதன் பானெட்டில் மிகவும் பழைய ஆனால் செயல்படும் ஒரு வானொலியும் உங்களை வரவேற்கும். பல ஆண்டுகள் வனவாசத்தால், கார் அதன் நிறத்தையும் அடையாளத்தையும் இழந்துவிட்டது. உறுதியான தோற்றம், அரை வழுக்கையான தலை மற்றும் சவரம் செய்யாத-முடி வெட்டாத, 2 ஜோடி ஆடைகள் கொண்ட மற்றும் ஒரு ஜோடி ரப்பர் செருப்புகள் கொண்ட ஒரு மெலிந்த மனிதர், வனப்பகுதியில் வாழ்வுக்குத் தன்னை மாற்றிக் கொண்டவர் சந்திரசேகர்.
Also Read: 7.20 லட்சம் கிமீ நீள வாலுடன் உலவும் மர்மப் பொருள் – விண்வெளியில் ஒரு அற்புதம்!
பின்னர், அவர் மீண்டும் நகருக்கோ அவரது கிராமத்துக்கோ திரும்பி வரவே இல்லை. 17 வருடங்களாக, காட்டுக்குள் தனியாக வாழ்ந்து வருகிறார். காட்டுக்குள் இருக்கும் ஆற்றில் குளிக்கிறார். சுயசார்பு வாழ்வியலை மேற்கொள்ளும் சந்திரசேகர், காட்டில் தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கூடைகளை செய்து, அருகில் இருக்கும் அத்லே கிராமத்தில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்து, அதற்குப் பதிலாக அரிசி, சர்க்கரை மற்றும் பிற மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்.
பல ஆண்டுகளாக இந்த வாழ்க்கை முறையை வாழ்ந்து வரும் இவருக்கு ஒரு ஆசை உள்ளது. ஒரே ஆசை தன் நிலத்தை திரும்பப் பெறுவதுதான். தன்னுடைய நிலம் சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அவர் பாதுகாப்பாக வைத்துள்ளார். இவரின் உலகமே, இவருடைய கார். பல ஆண்டுகள் ஆனாலும், காரை நல்ல நிலையில் பாதுகாப்பாக வைத்துள்ளார். அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல, காரை பயன்படுத்துகிறார். பல ஆண்டுகள் பழமையான வானொலியில், ஆகாசவாணி மங்களூரு நிலையத்தில் செய்திகள் மற்றும் பழைய இந்தி மெல்லிசைப் பாடல்களை விரும்பிக் கேட்கிறார்.
Also Read: சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! – முழு விவரம் உள்ளே
சந்திரசேகர் தனிமையில் வாழ்ந்து வருவதைப் பற்றி அறிந்ததும், ஆட்சியர் ஏபி இப்ராகிம் இவரை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து, இவருக்கு ஒரு வீடு தருவதாக உறுதியளித்தார். அதே போல, இவருக்காக ஒரு வீடும் கட்டப்பட்டது. ஆனால், அந்த வீடு ரப்பர் காடுகளுக்கு நடுவில் இருப்பதாகவும் அதை விரும்பவில்லை என்றும் அதை மறுத்துவிட்டார். காட்டு யானைகள் இவரின் வசிப்பிடத்துக்கு பலமுறை வந்து சென்றுள்ளன. காட்டுப்பன்றி, மான், சிறுத்தை மற்றும் காட்டெருமையும் அடிக்கடி வருகின்றன. பாம்புகள் ஊர்ந்து செல்லும் இடமாகவும் உள்ளது. ஆனாலும், சந்திரசேகர் அந்த இடத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்.
வனத்தின் வளங்களை கொள்ளை அடிக்கவில்லை, தீங்கு விளைவிக்கவில்லை அல்லது சேதப்படுத்தவில்லை. எனவே அவர் அங்கு தங்குவதில் வனத்துறைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மேலும், “நான் காட்டு மூங்கில்களைக் கூட வெட்டுவதில்லை. நான் ஒரு சிறிய புதரைக்கூட வெட்டினால், வனத்துறை என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவேன்" என்று கூறினார் சந்திரசேகர்.
vஅவரிடம் ஆதார் அட்டை இல்லை. ஆனாலும், அரந்தோடு கிராம பஞ்சாயத்து அவருக்கு கோவிட் -19 தடுப்பூசியைக் கொடுத்தது. ஊரடங்கு இவருக்கும் கடினமான காலமாக இருந்தது. அவர் அந்த நேரத்தில் பல வாரங்கள் தண்ணீர் மற்றும் காட்டில் கிடைத்த பழங்களை மட்டுமே உண்டு உயிர் பிழைத்தார். 17 வருடங்கள் காட்டிலேயே வாழ்ந்த பிறகும், இழந்த தனது நிலத்தை மீண்டும் பெறவும், தனது அம்பாசடரை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் கனவிலும் இருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Forest, Karnataka, News On Instagram, Trending