Home / News / national /

இனி மக்கள் குரலை எதிரொலிக்கும் போராளியாக திமுக இருக்கும் - திமுக அமைப்பாளர் சிவா!

இனி மக்கள் குரலை எதிரொலிக்கும் போராளியாக திமுக இருக்கும் - திமுக அமைப்பாளர் சிவா!

திமுக அமைப்பாளர் சிவா மற்றும் கட்சியினர்

திமுக அமைப்பாளர் சிவா மற்றும் கட்சியினர்

திமுக சார்பில் திருவள்ளூவர் தின விழா கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளூவர் படத்திற்கு திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

புதுச்சேரியில் இனி மக்கள் குரலை எதிரொலிக்கும் போராளியாக திமுக இருக்கும் என திமுக அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா கூறியுள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து (Puducherry)

அதிகரிக்கும் காலரா நோய் பரவல்.. காரைக்காலில் 144 தடை உத்தரவு அமல்..

புதுவை என்ஆர்.காங்., பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்களிடம் ஆதரவு திரட்டிய திரவுபதி முர்மு

அதிகரிக்கும் கொரோனா... மீண்டும் புதுச்சேரியில் அமலுக்கு வந்தது கொரோனா கட்டுப்பாடுகள்...

வேகமாக பரவும் காலரா.. காரைக்காலில் பொது சுகாதார அவசரநிலையை அறிவித்த சுகாதாரத்துறை!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவமானமா...? தமிழிசை பதில்..

காரைக்காலில் காலரா பரவல் அச்சம்.. முதல்வர் நேரடியாக தலையிட அதிமுக வலியுறுத்தல்

அரசியலில் ஜெயலலிதாவின் துணிச்சல் பிடிக்கும்.. மாணவி கேள்விக்கு தமிழிசை பதில்

முன்னோர் சாபம் போக்கும் கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் 64 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்க பூமிபூஜை..

தண்ணீர் மீட்டரை திருடி பேண்ட்டிற்குள் பதுக்கிய பெயிண்டர்.. சிசிடிவியால் சிக்கினார்...

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

தன்மானத்துடன் வாழ பாஜகவை விட்டு திமுகவிற்கு வாருங்கள்... புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு திமுக அழைப்பு...

திமுக சார்பில் திருவள்ளூவர் தின விழா கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளூவர் படத்திற்கு திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக அமைப்பாளர் சிவா, தீபாவளிக்கு அறிவித்த அரிசியை புதுவை அரசு இதுவரை வழங்கவில்லை. 4 முறை டெண்டர் வைக்கப்பட்டும் அதை தலைமை செயலர் ஏற்கவில்லை. இதற்கான காரணம் என்ன? என துறையின் அமைச்சர் விளக்க வேண்டும். பொங்கல் அறிவிப்புகள் தமிழகத்தில் போகி பண்டிகைக்கு முன்பாகவே சென்றுவிட்டது. ஆனால் புதுவையில் ஒரு பொங்கல் பரிசு பையைக்கூட வழங்கவில்லை.

377

புதுவையில் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படவில்லை. அரசியல் பெருமைக்காக ரூ.5 ஆயிரம் பணத்தை அரசு வழங்கியது. இந்த தொகை சாலைகள் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த நிதி, உள்ளாட்சி, கொம்யூன் நிதியை எடுத்து வழங்கிவிட்டனர். இதனால் பழுதானசாலைகளில் விழுந்து மக்கள் காயமடைந்து வருகின்றனர்.

தமிழகம்போல புதுவையில் பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்தனர். ஆனால் பொங்கல் பண்டிகை முடிந்துவிட்டது. இதன்பிறகு வழங்கினால் அது பொங்கல் பரிசா? தீபாவளி அரிசி, பொங்கல் பரிசு வழங்காததே அரசின் செயல்பாடுக்கு உதாரணம். 6 மாதம் புதிய ஆட்சியை எதிர்க்கக்கூடாது என பொறுத்திருந்தோம்.

இனி மக்கள் குரலை ஒலிக்கும் போராளியாக திமுக இருக்கும். முதல்அமைச்சரை தனிமைப்படுத்துவதாக, அதிகாரத்தை குறைப்பதாக நினைத்து புதுவை மாநில வளர்ச்சியை பாஜக சீர்குலைத்து வருகிறது. இதை மக்களிடம் கொண்டுசெல்வோம் என்று கூறினார்.

Tags:DMK, Pondicherry