500 ரூபாய் லஞ்சம் தொடர்பாக இரு பெண் சுகாதார ஊழியர்கள், மருத்துவமனையில் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடுமியை பிடித்துக் கொண்டும், செருப்பால் அடித்துக் கொண்டும் பெண் சுகாதார ஊழியர்கள் மருத்துவமனையில் சண்டையிட்டுக் கொண்ட போது அருகிலிருந்த ஆண் ஒருவர் இருவரையும் சமாதானப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் தற்போது இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தின் லக்ஷ்மிபூர் தாலுகாவில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுகாதார மையத்தில் காசநோய் தடுப்பூசி செலுத்துவதற்காக நேற்று குழந்தையுடன் வந்திருந்தார் ரிந்து குமாரி என்ற அங்கன்வாடி பெண் ஊழியர். இவர் தூக்கிக் கொண்டு வந்திருந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் அதற்காக 500 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என ஊசி செலுத்திய செவிலியர் ரஞ்சனா குமாரி கேட்டுள்ளார்.
Also read: அவமானப்படுத்திய சேல்ஸ்மேன்.. 1 மணி நேரத்தில் கார் ஷோருமை மிரள வைத்த விவசாயி!!
சுகாதார மையத்தின் பிரசவ வார்டுக்கு அருகே இரு ஊழியர்களும் தலைமுடியை பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். செருப்பாலும் அடித்துக் கொண்டனர். அருகே இருந்த ஆண் நபர் ஒருவர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றது. இருவர் மீதும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Bihar, Trending, Viral Video