PREVNEXT
முகப்பு / செய்தி / இந்தியா / என் கூட வாங்க நல்லா காசு பார்க்கலாம்.. நரபலிக்காக விரித்த வலை - வெளியாகும் அதிர்ச்சி தகவல்

என் கூட வாங்க நல்லா காசு பார்க்கலாம்.. நரபலிக்காக விரித்த வலை - வெளியாகும் அதிர்ச்சி தகவல்

பணத்திற்காக இரு பெண்கள் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் கேரள காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளா நரபலி வழக்கு விசாரணை

கேரளா நரபலி வழக்கு விசாரணை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர்.கடந்த ஜுன் மாதத்தில் இருந்து ரோஸ்லினும், செப்டம்பர் மாதத்தில் இருந்து பத்மாவையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, இருவரின் செல்போன்களும் கடைசி சிக்னலாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற பகுதியை காட்டியது.அவர்களின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக போலி மந்திரவாதியான முகமது ஷபி என்பவர் பேசியிருப்பதும் தெரியவந்தது.

உடனே முகமது ஷபியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களையும் நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்தார்.கொலை செய்யப்பட்ட 2 பெண்களில் பத்மா என்ற பெண் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், லாட்டரி தொழிலுக்காக அவர் கேரளா சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நரபலி கொலையானது திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத வைத்தியர் பகவல்சிங் - லைலா தம்பதி ஆகியோருக்காக நடந்துள்ளது. இந்த தம்பதி பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் முகமது ஷபி என்ற போலி மந்திரவாதியிடம் யோசனை கேட்டு நிலையில், அதற்கு ஷபி இந்த நரபலி ஆலோசனையை தந்துள்ளார்.

குற்றவாளிகளின் அதிர்ச்சி பின்னணி

இந்த காலத்தில் போய் நரபலி கொலைகள் நடைபெறுகிறதா என்ற அதிர்ச்சி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கொலை செய்த மந்திரவாதி ஷபி உயிரிழந்த ரோஸ்லி என்ற பெண்ணின் உடலை வெட்டி சாப்பிட்ட அதிர்ச்சி செய்தியும் விசாரணையில் வெளியாகியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட ஷபி தொடர்பாக அதிர்ச்சிக்குரிய பின்னணியை கேரளா காவல்துறை வெளியிட்டுள்ளது. ஷபி பாலியல் மனநோய் கொண்டவராகவும், உயிரிழந்த இரு பெண்களின் அந்தரங்க உறுப்புகளை கொலை செய்வதற்கு முன்னர் கத்தியை கொண்டும் சிதைத்துள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க: 'கேர்ள்ஸ் நைட் அவுட்!’.. கேரளாவில் பெண்களுக்காக நடந்த திருவிழா - மூவாட்டுப்புழா எம்எல்ஏ-வின் அசத்தல் முன்னெடுப்பு

377

மேலும், இந்த கடந்த 15 ஆண்டுகளில் ஷபி 10க்கும் மேற்பட்ட கிரிமினில் வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். 75 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்து அவரின் அந்தரங்க உறுப்பை சிதைத்த குற்றத்திற்காக இவர் 2020ஆம் ஆண்டில் கைதாகியுள்ளார்.

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • தற்போது பலியான ரோஸ்லின், பத்மா ஆகிய இருவரையும் போலி பேஸ்புக் கணக்கு மூலம் தொடர்பு கொண்டு தன்னை ஹைக்கூ கவிஞர் எனக் கூறி அறிமுகம் செய்துள்ளார். பின்னர் மெல்ல தனித்தனியே இருவரிடமும் ஆசை வார்த்தை பேசி அவர்களின் நம்பிக்கையை பெற்று, பெண்கள் இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நல்ல வருமானம் பெறலாம் என ஆசை காட்டியுள்ளனர். பின்னர் இருவரையும் சிங்-லைலை தம்பதியின் வீட்டிற்கு அழைத்து உடலை 56 பாகங்களாக அறுத்து வீட்டில் புதைத்துள்ளனர்.

    Tags:Double murder, Human Sacrifice, Kerala, Murder case

    முக்கிய செய்திகள்