10 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி வாய்வழி உறவு வைத்துக்கொண்ட குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழங்கப்பட்ட சிறை தண்டனையை குறைத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான போக்சோ சட்டத்தின் ( Protection of Children from Sexual Offences Act - POCSO) கீழ் வழக்குப் பதிவும் செய்யப்படுகிறது. ஆனால், போக்சோ சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்குதில் நீதிமன்றங்கள் இடையே தீர்க்கமான பார்வை இல்லை என்பதே அண்மைகால நிகழ்வுகள் எடுத்துகாட்டுகின்றன.
ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்று குற்றவாளி மீது போக்சோவில் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கேந்திவாலா ரத்து செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது.
இதையும் படிங்க: Cryptocurrency Bill | தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை- மசோதா கொண்டுவரும் மத்திய அரசு
இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் பிரிவு 6 (அதாவது 'மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமை'), அத்துடன் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 377 (இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள்) மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கியது.
மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமைக்கு (aggravated penetrative sexual assault) குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகள் ஆகும். அதன்படி, பிற பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனையுடன் 10 ஆண்டுகள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அணில் குமார் ஓஜா, சோனு குஷ்வாஹா செய்த குற்றம் மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது; அதேவேளையில் ஊடுருவும் பாலியல் வன்கொடுமையின் ( penetrative sexual assault) கீழ் வரும் என்று கூறி சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தது.
மேலும் படிக்க: எய்ட்ஸ் பாதிப்பு: ஹெச்.ஐ.வி. தொற்றில் இருந்து சிகிச்சையே இல்லாமல் குணமடைந்த பெண்!
போக்சோ சட்டத்தின் பிரிவு 5(m) இன் படி, பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தையின் மீதான எந்தவொரு ஊடுருவும் பாலியல் வன்கொடுமை 'மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமை' ஆகும். போக்சோ சட்டத்தின் கீழ் 'மோசமான' குற்றங்கள் மிகவும் கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும்.
ஆனால், இந்த பிரிவு இங்கு பொருந்தாது என்பது குறித்து நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. குற்றம் நடக்கும்போது சிறுவனுக்கு 10 வயது மட்டுமே நிரம்பி இருந்ததும் அவனை சோனு குஷ்வாஹா கட்டாயப்படுத்தி வாய்வழி உறவு கொண்டதும் தெளிவாக உள்ளபோது நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:HighCourt, POCSO case, Sexual harasment