Home / News / local-news /

அருப்புக்கோட்டை: முழு ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை - அபதாரம் விதிப்பு 

அருப்புக்கோட்டை: முழு ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை - அபதாரம் விதிப்பு 

விருதுநகர் அருகே முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய இறைச்சி கடைகள், உணவகங்களுக்கு அபதாரம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்க

விருதுநகர் அருகே முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய இறைச்சி கடைகள், உணவகங்களுக்கு அபதாரம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முழு ஊரடங்கு - அதிகாரிகள் தீவிர சோதனை:-

அருப்புக்கோட்டையில் முழு ஊரடங்கு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? என நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில், நகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எஸ்.பி.கே பள்ளி சாலையில் அரசு உத்தரவை மீறி மறைமுகமாக செயல்பட்ட இறைச்சி கடையில் 10 கிலோ எடையுள்ள கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

மேலும், அந்த இறைச்சிக் கடைக்கு ரூபாய் 1,000 அபராதமாக விதித்தனர். அதனை தொடர்ந்து, விவிஆர் காலணி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடையின் ஷட்டரை பாதியாக மூடி மறைமுகமாக விற்பனை செய்த மீன் கடை உரிமையாளருக்கு ரூ. 2,000 அபராதமாக விதித்தனர்.

அபராதம் விதிப்பு:-

உஜ்ஜிசாமி கோவில் தெரு, மலையரசன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட பலசரக்கு கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். முககவசம் அணியாமல் சரக்கு வாகனங்களில் பயணம் செய்தவர்கள், குடிதண்ணீர் விற்பனை செய்யும் வாகனங்களை இயக்கியவர்கள் என மொத்தம் ரூ 7,000 அபராதமாக வசூலித்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

377

செய்தியாளர்:அ.மணிகண்டன்,

விருதுநகர்

Tags:Virudhunagar