Home / News / local-news /

விருதுநகர்: 22 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் - ஆட்சியர் உத்தரவு 

விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

22 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள்:-

விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் நெல் அறுவடை காலம் தொடங்கியுள்ளது. மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்காக 22 இடங்களில் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், காரியாபட்டி தாலுகாவில் முடுக்கன்குளம், முஸ்டக்குறிச்சி, திருச்சுழி தாலுகாவில் வீரசோழன், பாப்பாங்குளம், கல்குறிச்சி, விளாங்குடி, பணக்குடி, வல்லகுளம், நெடுங்குளம் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்

377

Tags:Virudhunagar