Home / News / local-news /

விருதுநகர்: சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்: சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு சட்ட ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக பி.எல் அல்லது எல்.எல்.பி சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு , அரசு அலுவல் மற்றும் நீதிமன்ற பணிகளில் சட்ட ஆலோசனைகளை வழங்க சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்.பி மனோகர் தெரிவித்துள்ளார்.

சட்ட ஆலோசனை பணிக்கு அழைப்பு:-

விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு சட்ட ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக பி.எல் அல்லது எல்.எல்.பி சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் முறையாக பதிந்து இருப்பதுடன் உயர் நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றம் அல்லது மத்திய தீர்ப்பாயம் ஆகியவற்றில் ஐந்தாண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

வரும் 20ஆம் தேதி கடைசி நாள்:-

377

இப்பணிக்கு மாதம் ரூபாய் 20 ஆயிரம் வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 20ஆம் தேதிக்குள் மாதிரி விண்ணப்பப் படிவத்தை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பொதுப் பிரிவில் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்

Tags:Virudhunagar