Advertisment

bulletin news

விழுப்புரம் : இன்றைய செய்தி தொகுப்பு, அக்டோபர் 21

October 21, 2021, 22:28 IST
செய்தி : 1

விழுப்புரம்: சாலைகளில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி ஆரம்பம்

விழுப்புரம் நகர பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரிந்து விபத்து ஏற்படுத்திய 50 க்கு மேற்பட்ட பன்றிகளை, நகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்று காப்பு காட்டில் விட்டனர்.

விழுப்புரம் நகரப் பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் வலம் வருவதால், அடிக்கடி இரு சக்கர வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், நகரப் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் புகார்களை அளித்தனர்.

அந்த புகார்களின் அடிப்படையில் பன்றிகளை வளர்ப்போர், நகரப் பகுதிகளில் விடக்கூடாது எனவும் வீடுகளிலேயே பட்டிகள் கட்டி வளர்க்க வேண்டும். இல்லையெனில் பன்றிகளை பிடித்து செல்லப்படும், என்ற அறிவிப்பு நோட்டீஸ் நகராட்சி மூலம் வழங்கினர்.

இருப்பினும் சிலர் பன்றிகளை பட்டிகளில் வளர்க்காமல் சாலை ஓரங்களில் திறந்துவிட்டு விடுகின்றனர். மேலும், விழுப்புரத்தில் அதிகளவில் மழை பெய்து வருவதால் பன்றிகள் ஆங்காங்கே உள்ள குளங்கள், குட்டைகள் போன்ற இடங்களில் உள்ள சேற்றில் இருந்து குடியிருப்பு பகுதிகளில் அப்படியே வருவதால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தப் புகாரை அடுத்து இன்று திருவிக வீதி, கோவிந்தசாமி நகர், அரசு குடியுறுப்புகள் மற்றும் சாலைகளில் வலம் வந்த 50 க்கும் மேற்பட்ட பன்றிகளை நகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் இன்று பிடித்து சென்று காப்பு காட்டில் விட்டனர்.

செய்தி : 2
விழுப்புரம் : மழைநீர் சேகரிப்பற்காக வெட்டப்பட்ட குளத்தை ஆக்கிரமித்த செடிகள்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு குளங்கள் வெட்டப்பட்டன. அவை தற்போது ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து காணப்படுகிறது.

2019 ஆண்டு ஆட்சியராக பணிபுரிந்த முன்னாள் ஆட்சியர் சுப்பிரமணியன், இந்த குளங்களை படகு சவாரி விடுவதற்கான பணிகளில் ஈடுபத்த உத்தரவிட்டிருந்தார். அவர், மாற்றலாகி சென்றதையடுத்து, இந்த குளத்தை இங்குள்ள ஊழியர்கள் பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
மேலும் படிக்க்
Advertisment

More from Other District