Advertisment

bulletin news

திருச்சி: அரசுப்பள்ளி ஏழை மாணவர்களை, கல்வியில் முன்னேற்றும் மாற்றுத்திறன் ஆசிரியர்

October 28, 2021, 13:21 IST
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து திருப்பைஞ்ஞீலி கிராமம் உள்ளது. இங்கு, 15 வருடங்களாக கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார், பாலசுப்பிரமணியம் எனும் மாற்றுத்திறனாளி இளைஞர்.

திருப்பைஞ்சீலி கிராமம் ரத்தினம்- பழனியம்மாள் தம்பதியரின் ஒரே மகன் பாலசுப்பிரமணியம். பிஏ ஆங்கிலம் படித்த இவர், தனது கிராமத்தில் உள்ள பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைந்த தொகையில் டியூசன் எடுத்து வருகிறார்.

தனது, 20 வயதில் எதிர்பாராத விதத்தில் மாடிப்படியில் இருந்து இறங்கும்போது, தடுமாறி விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கைக்கு தள்ளப்பட்டார். பின்னர், தன்னால் முடிந்தவரை சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனால், அதில் எந்தவித பலனும் இல்லாமல் போனது. சில வருடங்கள் வீட்டில் படுத்த படுக்கையில் இருந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து உட்கார ஆரம்பித்தார்.

பின்னர், படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிஏ ஆங்கிலம், தொலைதூரக் கல்வியில் படித்துள்ளார்.

படித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே அப்பகுதியில் உள்ள, கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து நடத்தி வந்துள்ளார்.

ஆரம்ப காலக்கட்டத்தில் 10 மாணவர்கள் வந்து படித்த டியூசன், தற்போது 100 மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இவரிடம், படித்த மாணவர்கள் ஆண்டுத் தேர்வில் பள்ளி முதலிடம் பெற்று வந்துள்ளனர்.
மேலும் படிக்க்
Advertisment

More from Other District