Advertisment

bulletin news

தஞ்சாவூர் : ஆடி பெருக்கை  எளிமையாக கொண்டாடிய புதுமண தம்பதியினர்

August 04, 2021, 09:27 IST
ஆடி 18 எனும் ஆடிப்பெருக்கில் , காவிரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு வந்த போதும், அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, விழா களை இழந்து காணப்பட்டது.

தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணத்தில் உள்ள முக்கிய படித்துறைகள் அனைத்தும் மூடப்பட்டதால், ஆடிப்பெருக்கு, வழக்கமான உற்சாகம் இன்றி, காவிரி அன்னையை வழிபட ஆங்காங்கே, தனித்தனியாக, சிறு படித்துறைகளிலும், நீர்நிலைகளில் படையல் இட்டு அருகேயுள்ள சிறிய கோயில்களில் தாலிப்பெருக்கி போட்டுக்கொண்டு, திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், மிக எளிமையாக கொண்டாடி  புதுமண தம்பதியினர் மகிழ்ந்தனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசு, கடந்த 1ம் தேதி முதல்  3ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முக்கிய திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், நீர் நிலைகள் மற்றும் ஆற்று படித்துறைகளிலும் ஆடிப்பெருக்கு கொண்டாடவும் தடை விதித்தது. இதனால், கும்பகோணத்தில் முக்கிய படித்துறைகளான பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மகாமக திருக்குளம் ஆகியவை மூடப்பட்டுள்ளன . இதனால், ஆடிப்பெருக்கை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,

மேலும் படிக்க்
Advertisment

More from Other District